ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் அரசாங்கமும் ஜனாதிபதியும் நேரடியான தீர்மானம் ஒன்றை எடுக்க முடியும் என இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று -09- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி விரும்பவில்லை என்றால், அது குறித்து இரண்டு முறை சிந்திக்க வேண்டும்.
பிக்கு ஒருவர் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியோ, கொள்ளையில் ஈடுபட்டிருந்தாலோ ஜனாதிபதியிடம் மன்னிப்பு வழங்குமாறு கோர மாட்டோம்.
எனினும் நாட்டுக்காகவும் இனத்திற்காகவும் படையினருக்காகவும் குரல் கொடுத்தவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவில்லை என்றால் அது தேசிய குற்றம்.
ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்கும் இடத்திற்கு கொண்டு வருவதற்காக நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத்தின் சின்னமான ஞானசாரவை, அரசாங்கம் உயர் நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராகத் தலையிட்டு விடுவிக்க முயன்றால், நீதியை நேசிக்கும் சர்வதேசத்தின் தலையீட்டுக்கே அது வழிவகுக்கும்.
ReplyDeleteAny one close to a president can enjoy this .. and can continue their crime at any scale.
ReplyDeleteThis will be second time helping a ..
பெற்ற மகனை விட வழப்பு மகனோடு பாசம் அதிகம்
ReplyDeleteநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு தேசிய குற்றமா?
ReplyDeleteநிரூபிக்கப்பட்ட குற்றவாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதென்றால், நீதிமன்றங்கள் எதற்கு? சிறைச்சாலைகள் எதற்கு?
ReplyDeleteஅவ்வாறு ஜனாதிபதி நினைத்தவாறு இந்த விடயத்தை சாதாரணமாக எடுத்துக் கொண்டால் கோட்டு, கேசு, விசாரணை என்ற நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்ட அரச பணத்தை (மக்கள் பணத்தை) ஜனாதிபதி மீளச் செலுத்துவாரா?