பாரிய பொருளாதார நெருக்கடியில், சிக்கவுள்ள இலங்கை
Moody எனப்படும் சர்வதேச நிதி தர நிர்ணய நிறுவனம் அண்மையில் தமது புதிய தரப்படுத்தலை வௌியிட்டது.
உலகில் பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மற்றும் அபாய நிலையிலுள்ள நாடுகள் தொடர்பில் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு அமைய, கடந்த காலப்பகுதியில் இலங்கையின் அந்நிய செலாவணி இருப்பு அதிகரித்துள்ளது.
எனினும், முறையான நீண்ட கால அந்நிய செலாவணி விநியோகமின்மையால், 2019 – 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மீள செலுத்தப்படவேண்டிய சர்வதேசக் கடன் அதிகரித்துள்ளது.
இதனால் இலங்கை மீதான சுமை அதிகரித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேசக் கடன் உள்ளிட்ட மேலும் சில விடயங்கள் காரணமாக, சர்வதேச நிதி நிலைமைக்குள் இலகுவில் அகப்படக்கூடிய நாடு என இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது.
Post a Comment