ரணில் உயிருடன் இருப்பாரா, என்பதே சந்தேகம்
வன்முறைகள் மீண்டும் தலைதூக்குவதற்கு வடபகுதி மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
தெற்கில் தேவையற்ற பயபீதி நிலவுகின்றது ஆனால் வடபகுதி மக்கள் மீண்டும் வன்முறைகள் தலைதூக்குவதற்கு அனுமதிக்கமாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிற்கு எவை சிறந்த விடயங்கள் என கதைப்பதற்கு ரணில்விக்கிரமசிங்கவிற்கும் பசிலுக்கும் அருகதையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 70 வருடங்களாக இரு பிரதான கட்சிகளும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் எவையும் தங்களிடம் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளன எனவும் ஜேவிபி தலைவர் தெரிவித்துள்ளார்.
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு தனக்கு 32 வருடங்கள் தேவை என ரணில்விக்கிரமசிங்க தெரிவிக்கின்றார்,அவரிற்கு தற்போது 70 வயதாகிவிட்டதால் அவர் அது வரை உயிருடன் இருப்பாரா என்பதே சந்தேகம் எனவும் ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பத்து வருடங்களாக ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்ச நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக மீண்டுமொருமுறை அதிகாரத்தை கோருகின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment