முஸ்லிம் திருமண சட்டத்தில், எத்தகைய திருத்தத்துக்கும் இடமளிக்க வேண்டாம்.
இலங்கையின் நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களின் கவனத்திற்கு.
அஸ்ஸலாமு அலைக்கும்.
இலங்கையில் யுத்தம் முடிவுற்று சகல இனங்களும் ஒற்றுமையாய் வாழ்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் கவனத்தை திசை திருப்புவதற்காக முஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் தேவை என்று ஒரு சிலர் கோரிக்கை விடுப்பதை நாம் அறிவோம்.
இது முழு முஸ்லிம் சமூகத்தினதும் கோரிக்கை அல்ல, மாறாக ஐரோப்பிய நாடுகளின் கைக்கூலிகளாக உள்ள சிலரின் கோரிக்கையாகும்.
1952ம் ஆண்டு பூரணப்படுத்தப்பட்டது முதல் இன்று வரை மேற்படி முஸ்லிம் திருமண சட்டத்தின் பிரகாரம் முஸ்லிம் சமூகம் தனது விவாகம் மற்றும் விவாகரத்து விடயங்களை பாரிய பிரச்சினைகள் இன்றி இலகுவாக கையாண்டு வருகிறது. எமது முஸ்லிம் அரசியல் மூதாதையர் பாரிய பல முயற்சிகள் செய்து இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு இந்த உரிமையை நிலைநாட்டியுள்ளார்கள். இதற்கு அனைத்து சிங்கள அரசியல்வாதிகளும் ஒத்துழைத்துள்ளார்கள்.
நாட்டில் சிங்கள மக்களுக்கென கன்டிய திருமண சட்டம் உள்ளது, தமிழ் மக்களின் யாழ்ப்பாண திருமண சட்டம் உள்ளது. இவற்றில் யாரும் திருத்தம் தேவை என கூறாத நிலையில் முஸ்லிம் திருமண சட்டத்தை மட்டும் இலக்கு வைப்பதன் மூலம் மேலைத்தேய நாடுகளின் சதி இங்கு இருப்பதை நாம் காணலாம்.
மேற்படி திருமண திருத்த சட்டத்தில் திருத்தம் வேண்டுமா என ஆராய கடந்த ஆட்சியில் 2009ம் ஆண்டு அரசால் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. ஆனாலும் எத்தகைய திருத்தத்தையும் செய்ய இடமளிக்க முடியாது என நாம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்ததை தொடர்ந்து இது விடயத்தை அவர் கைவிட்டிருந்தார். இதற்காக நாம் அவரை இந்த இடத்தில் பெரிதும் பாராட்டுகிறோம்.
இந்த அரசாங்கம் வந்தது முதல் இந்த சதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தில் கைவைப்பதன் மூலம் எதிர் காலத்தில் இது முற்றாக ஒழிக்கப்படும் நிலையும் ஏற்படலாம். முஸ்லிம்களுக்கென தனிச்சட்டம் தேவையில்லை என்றும் பொது சட்டமே தேவை என சில இனவாத ஹாமதுருமார் பகிரங்கமாக பேசும் நிலையில் நாம் இப்போது ஒரு திருத்தத்துக்கு வழி செய்தாலும் நாளை இன்னொரு திருத்தத்தை இனவாதிகள் முன் வைத்து 2018ல் திருத்தினீர்கள்தானே இப்போது ஏன் திருத்த முடியாது என கேட்டால் நாம் பதில் சொல்ல முடியாது போய் விடும்.
இலங்கை முஸ்லிம்களின் இப்போதைய பிரச்சினை என்பது பெண்கள் சிறு வயதில் திருமணம் முடிப்பதல்ல, மாறாக 30 வயது கடந்தும் திருமணம் முடிக்காத முதிர் கன்னி பிரச்சினையே பாரதூரமாக உள்ளது. இந்தப்பெண்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கமோ, பெண் உரிமை பேசுவோரோ, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களோ எதுவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
முஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் தேவையா இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை உலமாக்களுக்கு மட்டுமே உண்டு. இதனை உலமா சபையும் உலமா கட்சியும் பேசி முடிவுக்கு வரலாம் என்பதை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு சொல்ல வேண்டும். இதில் உலமா அல்லாதவர்கள் கைவைக்க நல்லாட்சி அரசு அனுமதியளிக்க கூடாது என்பதை சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.
முஸ்லிம் தனியார் திருமண சட்டம் என்பது இறைவன் வழங்கிய சட்டமாகும். இதில் கைவைக்க எந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் இடமளித்தாலும் அவர் இறை தண்டனைக்குள்ளாவார் என்பதை நாம் எச்சரிப்பதுடன் எதிர் கால சந்ததியும் சாபமிடும் என்பதை முன்கூட்டியே தெரிவிக்கிறோம்.
ஆகவே மேற்படி திருத்த அறிக்கை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கைகளுக்கு வரும்போது இதனை அவர்கள் முற்றாக நிராகரிப்பதாக பாராளுமன்றத்துக்கு சொல்ல வேண்டும் என நாம் உங்களை அன்பாகவும் வினயமாகவும் கேட்டுக்கொள்கிறோம்.
சுமார் 200 வருடங்களாக இந்த நாட்டு முஸ்லிம்கள் அனுபவித்துவரும் மேற்படி முஸ்லிம் திருமண சட்டம் திருத்தப்படுவதன் மூலம் உங்களது வாழ்நாளில் இது களங்கப்படுத்தப்பட்டது என்ற அவப்பெயரை நீங்கள் தவிர்ந்து கொள்ளும்படியும் நாம் கேட்பதுடன் இது சம்பந்தமான முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோரின் அறிக்கைகளை தள்ளுபடி செய்து அதற்கான குழுவையும் அரசு ரத்து செய்யவேண்டும் எனவும் அரசுக்கு சொல்லும்படி சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அள்ளாஹ்வுக்காக கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வண்ணம்.
முபாறக் அப்துல் மஜீத் மௌலவி,
தலைவர், உலமா கட்சி.
அல்ஹாஜ் எஸ். சுபைதீன்
தலைவர்
அஷ்ரப் காங்கிரஸ்
22.08.2018
இக்கருத்து தூரநோக்குக் கொண்டது! சகல தரப்பினரும் இதை ஆழமாக சிந்தித்து செயற்பட வேண்டும் !
ReplyDeleteதூரநோக்குடனான கருத்து! உண்மையான நிலைமையை உணர்த்தி எழுதப்பட்டுள்ளது. இருக்கும் பிரச்சனை போதாதென்று எமது சட்டத்தையும் மேலும் மேலும் கூவிக்கொக்கரித்து ஏலம் போட்டு ஏனைய சமூகத்தை எம்மீது ஏவிவிடாமல் இத்துடன் நிறுத்திக்கொள்வதே நல்லது! எனினும் காழி நீதவான்களின் தகைமைகள் மற்றும் உரிய ஊதியம் போன்ற நிர்வாக க்க்கட்டமைப்புகளை ஒழுங்கு படுத்தி வலுவூட்டல் மட்டுமே போதுமானது. சட்ட திருத்தம் அவசியமற்றது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட.
ReplyDeleteWe too agreed this statement because this some what containing long term vision in favour of Sri Lankan Muslims. So there is no necessity to update or edit Muslims Personnel Law in Sri Lanka at present. We should not agreed Salim Marsook or any one's his supporter's report / statements or protest against to existing MPL it is very clearly appearing like accomplish some racists' aims.
ReplyDeleteSalim Marsook and western aid protesters in this matter must understand it is a clear plan to crushing the growing of Muslims in Sri Lanka.
There is not stated in the Sariyaa Law for compulsorily to get marry immediately right after the girls who become big girls. Then what else the stupid arguments on this matter?. Hence Mr. Salim Marsook and his supporters please let Muslim society in Sri Lanka to live peace without any splittings.
We should hear the grievances from women who have been affected by this existing law. Men can say anything but in reality women are being forced to live a hard life. Any changes to MMDA should be within the limits of Sharia. In the history of Islam the laws have been changed from time to time.
ReplyDeleteMuslim Marriage and Divorce Act was based on 06th Century Ideas. Under this act, Muslim females should rely on Wali for Marriage. Divorce cases are heard by Quazi an un-person. He is under feudal set in the village. Muslim women should be allowed to marry outside Muslim Marriage and Divorce Act.People in the 06th century were riding camel and now they are driving in cars. To determine festivals, we are forced to depend on Moon despite inventions had brought down solar system under our feet. We must throw away this act and liberate females from slavery and idiocy.
ReplyDeleteஇறைவன் வழங்கிய சட்டமாக இருந்தால் திருத்த முடியாது என்பதில் கருத்துவேறுபாடில்லை. எமது வாதம் இஸ்லாமிய சட்டம் இந்த விடயத்தில் சரியாக பரிந்துரைக்கப்படவில்லை எனபதுதான். ஆண்களும் பெண்களும் சமபங்கெடுக்க வேண்டிய விடயத்தில் ஆண்கள் மட்டும் தீர்மானம் எடுக்கும் சட்டத்தொகுப்பானது மிகவும் உறைப்பாக இருக்கின்றது. நடைமுறையில் ஆணவம்கொண்டு ஆடித்திரியும் பல ஆண்கள் உள்ள குடும்பங்ளை மிகவும் பக்குவமாகக்கொண்டு செல்பவர்கள்பெண்களாக இருக்கின்றனர். பெண்தலைமைத்துவம் கொண்ட பல குடும்பங்கள் இதற்கு பலமான உதாரணமாக திகழ்கின்றது. ஆண் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்ளைக் கண்டுள்ளீர்களா? இவ்வாறு குடும்பப்பொறுப்புகளை ஏற்று தன்னை அழித்து குடும்பம் காக்கும் ஒருபெண்ணுக்கு அவளின் வாழ்க்கை பற்றி தீர்மானிக்க இடங்கொடாத மனிதாபிமானமற்ற மார்க்கமாக நான் இஸ்லாத்தைப் பார்க்கவில்லை.
ReplyDeleteஉங்களின் பிரச்சனை இந்தத் திருத்தத்தினைச் செய்தால் மேலும் திருத்தம் செய்ய வேண்டிவரும் என்பதா? அல்லது இஸ்லாமிய சட்டத்தை மாற்ற முடியாது என்பதா? வாதம் புரிய முடியவில்லை.
நமது பக்கம் தவறுளை வைத்துக் கொண்டு ஐரோப்பிய நாட்டின்கைக்கூலி,மேற்கத்தேய நாட்டின் சதி என மற்றவர்கள் மீது பழிபோடுவது மனித பண்பு.
உலமா சபையுடன்பேசி முடிவுக்கு வருமாமாறு சொல்லும் உலமா கட்சித்தலைவர் உலமா சபையின் பிறை முடிவுகள் தவறானது என கூறுபவர். கடந்த கிரகணம் வந்த தினத்தில் கிரகணத்தொழுகை தொழுமாறு உலமாசபை கேட்டுக்கொண்டதாகவும் இந்த விடயத்தல் வானிலை அவதான நிலையத்தின் கட்டளையை ஏற்றுக்காள்ளும் நீங்கள் ஏன் ரமழான் பிறை விடயத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார். அப்படி என்றால் திருமணச்சட்டத்திற்கு எவ்வாறு சரியான தீர்வினை உலமா சபையினால் வழங்க முடியும் என எதிர்பார்க்கின்றார். தலை சுற்றுதையா...
இதை ஒரு விவாதமாக எடுத்துக்கொண்டால் இப்போதிருக்கும் சட்டத்தின் பிரகாரம்; ஆண்கள் தானே பாதிக்கப்படுகின்றனர். மஹர் கொடுப்பனவு முதல் விவாகரத்து வரை மற்றும் விவாகரத்துக்கு பின்னரும் தாபரிப்புகள் என்பன ஆண்கள்தானே கொடுக்கின்றனர்! இதையும் ஆண் காதிகளே தீர்ப்பளிக்கின்றனர்! பெண் தான் எவ்வளவு செல்வத்தைக் கொண்டிருந்தாலும் எந்த வருமானமுமற்ற ஆணானாலும் சரி அவனிடம் தானே இவை அறவிடப்படுகின்றள. இவற்றை கட்ட முடியாமல் பல ஆண்கள் சிறையிலும் உள்ளனரே! இவற்றையே ஆண்கள் பொருட்படுத்தவில்லையே! ஆண்-பெண் சமவுரிமை பேசுவோர்! திருக்குர்ஆனில் 4வது அத்தியாயத்தை (அன்னிஸாவை) முழுமையாக உண்மை ஈமானுடன் ஒருமுறையாவது ஓதிக்கொள்ளட்டும்!! இதனையும் சவாலுக்கு எடுத்தால் விவாதத்தை படைத்தவனிடம் விட்டுவிட வேண்டியதுதான்.
ReplyDeleteMMDA is not god given. It's a law of this land. It can be amended or replaced. Don't glorify it to the level of wahi/Sharia.
ReplyDeleteசகோ. அலியார் யானை பார்த்த கதை போல் இதனைப்பார்க்க முடியாது உலக மக்கள் எந்த மூலையில் வாழ்ந்தாலும் பின்பற்றக்கூடிய சட்ட திட்டங்கள் வகுக்கப்படல் வேண்டும். இதற்கமைய விசாலமாக எழுதப்பட்ட கருததைுரை ஒன்றினை இதே media வில் August 20 ல் சகோ. அஃபான் அப்துல் ஹலீம் எழுதியிருக்கின்றார் வாசித்துப்பார்க்கலாம். தாபரப்பு கொடுக்கினறனர் என்று கூறுகின்றீர்கள் நீதி ஒன்றாகத்தானே இருக்க வேண்டும் பஸ்கு செய்யும் போது தலைகீழாக மாறுவது ஏன்?
ReplyDelete2:228 தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்; அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது. ஆனால் பெண்களின் கணவர்கள் (அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம்) இணக்கத்தை நாடினால், (அத்தவணைக்குள்) அவர்களை (மனைவியராக)த் திருப்பிக்கொள்ள அவர்களுக்கு அதிக உரிமையுண்டு, கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு; ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு; மேலும் அல்லாஹ் வல்லமையும்; ஞானமும் மிக்கோனாக இருக்கின்றான்.
If it is a law of land and no connection with Shaia / vahi, then why we call as a "Muslim M.D. Act". If so, better to follow the common law. The so called “amendment” and arguments may result to a destruction of the personal law which we got long ago and protected by our generation up to date . This law was set considering and focussing so many factors in relation to the situation of our country. Complete sharia law cannot be implemented here. But, as much as possible, they included clauses into the 1951 act. We should not find false or downgrade the Act or act- makers. The so called “amendment” and arguments may result to a destruction of the personal law which we got long ago and protected by our generations to date. This law was set focusing so many factors in relation to the situation of our country. Complete sharia law cannot be implemented here. But, as much as possible, they included classes into the 1951 act. My point of view that there is no any need to bother / worry about the current MMDA. Time to time committees were appointed and they all considered the situation and concluded that no need to change the MMDA. But the implementation of the MMD is having shortcomings. We need to rectify those shortcomings but not the Act.
ReplyDeleteYes, rectify is a good word
ReplyDelete