முஸ்லிம்களிடம் ஆயுதங்கள் உள்ளதென, புலிகள் ஆடிய நாடகம்...!
-Roomy Abdul Azeez-
ஒரு புலி வீடியோ கிளிப்பில் வந்து “தங்கள் ஆயுதங்கள் எல்லாம் கிழக்கிலங்கை முஸ்லிம்களினால் வாங்கப்பட்டது, அது அவர்களிடம் தான் இருக்கிறது” என ஸ்டேட்மென்ட் விடுகிறது. அதனை சிங்கள ஊடகங்கள் தங்கள் மக்கள் மத்தியில் வீரியமாக எடுத்துச் செல்கின்றன. இந்த நிமிடம் வரை அது பெரும் அலையாக அவர்கள் மத்தியில் வீச ஆரம்பித்துள்ளன.
அந்த கருத்தை சொன்னவன் விடுதலை புலிகள் அமைப்பை சாந்தவன் தானா உண்மையில் என்பது முதலாவது எழும் கேள்வி. அப்படியென்றால் அவன் ரேங் என்ன. எந்த பிரிவில் இருந்தான் என்பது இரண்டாவது கேள்வி.
அவன் வெளியிட்ட கருத்தை பரப்புரை பிரச்சாரம் செய்வது பௌத்த இனவாத அமைப்புக்கள் சார்ந்த மீடியாக்கள் தான். அப்படியென்றால் யாருக்காக இந்த கருத்து எதற்காக வெளியிடப்பட்டுள்ளது?
முஸ்லிம் சமூகம் இது பற்றி பெரிதாக சிந்தித்ததாக தெரியவில்லை. குர்பான் கொடுப்பதில் முனைப்பாக இருக்கிறது. குர்பானாக போவது புரியாமல்.
1990 களில் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் சுல்த்தான் பேக்கரிக்கு பின்னால் புலிகளின் அன்றைய தென்மாராட்ச்சி பொருப்பாளராக இருந்து பாப்பா எனும் பின்னாட்களில் அவர்களின் அரசியல் பிரிவு தலைவனாக செயற்பட்ட சு.ப. தமிழ்ச்செல்வன் பதுக்கி வைத்த ஆயுதங்களை பின்னர் அவர்களே கண்டு பிடித்தது போல நாடகம் ஆடி ஒட்டு மொத்த வடபுல முஸ்லிம்களையும் வெளியேற்றினர்.
தமிழ் சமூகம் முஸ்லிம்கள் மீதான பலாத்கார வெளியேற்றத்தை ஏற்றுக்கொள்ளாத போதும் அவர்கள் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தமை, ஆணையிறவு, பலாலி இராணுவ முன்னேற்றங்களின் போது தங்களை தாக்க என்ற பீதியுணர்வில் அந்த புலிகளின் மிலேச்சத்தனத்தை ஏற்றுக்கொண்டு ஆதரித்தார்கள்.
அந்த நிகழ்விற்கும், புலி வீடியோ கிளிப்பில் சொன்னதற்கும் பெரிய வித்தியாசங்கள் கிடையாது. முஸ்லிம்களிடம் ஆயுதங்கள் என்ற பிரச்சாரம் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். முஸ்லிம்களிடம் ஜிஹாத் என்ற கருத்து முதலே உள்ளது. அதனுடன் இதுவும் சேர்ந்தால் இனவாத பிரச்சாரம் வேர்க்அவுட் ஆகும்.
சாதாரண நல்ல சிங்கள மக்கள் கூட இதில் உள்வாங்கப்படுவார்கள் யாழ்ப்பாண தமிழ் சமூகம் அதை நம்பியது போல.
இந்த விடயம் தொடர்பில் சட்டரீதியாக, பிரச்சாரரீதியாக மேலும் இன்னோரன்ன விதத்தில் எமது சமூகத்திற்கும் ஆயுதங்களிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை தெளிவாகவும் ஆவணரீதியாகவும் முன்வைப்பது முஸ்லிம் சமூகத்தின் தலைவர்களின் கடமை.
ஆனால் அவர்கள் இதனை பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. யாரோ ஒருவனின் திட்டமிட்ட இனவாத நடவடிக்கை என புறந்தள்ளுகிறார்கள். இங்கே அது அல்ல பிரச்சினை. இந்த கருத்து சிங்கள மக்கள் மத்தியில் ஆழமாக உள்வாங்கப்படுவது மிக ஆபத்தானது. இதன் வெடிப்புக்கள் இன்னும் சில காலங்களில் தெளிவாக எம்மால் உணரப்படும் நிலை வரும். இறைவனே போதுமானவன்...!
We have to follow our Dheen
ReplyDeleteAllah will protect us
It's tiger terrorists who took arms and pushed the entire nation into terrorism. They still do the same...
ReplyDelete