பலஸ்தீன மக்களின் உரிமை விற்பனைக்கல்ல என்பதும், கல்முனை விவகாரமும்...!!
பலஸ்தீனர்களின் ஈமானிய பலத்தினையும் சமூக உணர்வினையும் படிப்பினையாக கொண்டு கல்முனை நகரை பாதுகாப்பதற்கான முழுமையான நடவடிக்கையில் முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டு இறங்க வேண்டுமென அம்பாறை மாவட்ட இளைஞர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கல்முனை நலனுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் அம்பாறை மாவட்ட இளைஞர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பலஸ்தீனத்தின் நகரமான ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்க அரசு அறிவித்ததனை எதிர்த்து பலஸ்தீன அரசும் மக்களும் அமெரிக்காவை மிகக் கடுமையான முறையில் கண்டித்தமையினால் பலஸ்தீன அரசுக்கு வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டிருந்த 251 மில்லியன் டொலர்; நிதியினை நிறுத்துவதாக அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது.
பலஸ்தீன அரசையும் மக்களையும் தண்டிக்கும் வகையில் விடுக்கப்பட்ட அவ்வறிவித்தல் தொடர்பில், இவ்வாறு நிதியினை நிறுத்தி அமெரிக்கா அச்சுறுத்த முடியாது என்றும் பலஸ்தீன மக்களின் உரிமை விற்பனைக்கானதல்ல என்றும் பலஸ்தீன அரசும் மக்களும் திடகாத்திரமாக கூறியுள்ளனர். தமது நகரான ஜெரூசலத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்பதற்காக அந்நிதிகளை இழந்துள்ளதோடு அமெரிக்காவுக்கு எதிரான ஆர்பாட்டங்களின்போது இளைஞர்களின் உயிர்களையும் இழந்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
பலஸ்தீன மக்களின் அக்கூற்றினை இலங்கை முஸ்லிம்கள் உற்று நோக்க வேண்டியுள்ளது. இதேபோன்ற விடயம் இன்று கல்முனை மாநகரத்தில் அரங்கேற்றப்படுகிறது. இலங்கை முஸ்லிம்களின் முகவெற்றிலையாக கல்முனை மாநகரம் இருந்துவிடக் கூடாது என்பதற்காக கல்முனையினை சிதைக்க சில இனவாதிகள் கங்கனம்கட்டி களத்தில் இறங்கியுள்ளனர்.
பல தசாப்த காலமாக மிக ஒற்றுமையாக தமிழ் முஸ்லிம் மக்கள் ஐக்கியமாக வாழுகின்ற இந்த கல்முனை நகரத்தில் நிலத்தொடர்பற்ற ரீதியில் ஒரு பிரதேச செயலகத்தை உருவாக்க வேண்டுமென சில சக்திகள் முனைந்து கொண்டிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்தில் உள்ள புத்திஜீவிகள், இளைஞர்கள் பலஸ்தீன மக்களின் அந்த உறுதியான கொள்கையினை நினைத்துப் பார்க்க வேண்டும், இலங்கை நாணயப் பெறுமதியில் கிட்டத்தட்ட 4000 கோடி ருபாவை இளந்தாலும் பறவாயில்லை தங்களுடைய ஜெரூசலம் நகரத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்ற உறுதியான நிலைப்பாடு எங்களுகு;கு ஒரு படிப்பினையை உணர்த்துகின்றது.
எங்கள் சமூகத்தில் உள்ள வைத்தியர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலரும் வரலாறு தெரியாத சிலரும் கல்முனை சிதைக்கப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவாக முகாநூலில் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் பலஸ்தீன மக்களிடம் பாடத்தை கற்க வேண்டும், அவர்களின் ஈமானிய பலத்தினையும் சமூக உணர்வினையும் படித்தறிய கடமைப்பட்டுள்ளனர்.
கல்முனையின் பிரச்சினை என்பது ஒரு குறிப்பிட்ட ஒரு ஊருக்குரிய பிரச்சினை அல்ல என்பதையும் அது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் அடையாளக் குறிக்கான பிரச்சினை என்பதையும் சகலரும் உணர்ந்து பிரதேச, கட்சி வேறுபாடுகளுக்கப்பால் முஸ்லிம் சமூகம் என்றவகையில் ஒற்றுமைப்பட்டு கல்முனையினை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்.
சிங்கள சமூகத்திற்கு பெரியளவிலான பிரதான நகரங்கள் இருந்து கொண்டிருக்கின்றன, அதேபோன்று தமிழ் மக்களுக்கென்று யாழ்ப்பானம், திருகோணமலை, மட்டக்களப்பு என்று பிரதான நகரங்கள் இருந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு இலங்கையில் சகல இனத்தவர்களுக்கும் பிரதான நகரங்கள் இருக்கின்ற நிலையில் முஸ்லிம்களின் முதன்மையான பிரதான நகரமான கல்முனைக்கு இன்று அச்சுறுத்தல் வந்திருக்கின்றது.
கல்முனையில் ஏதாவது அபிவிருத்திக்கு நிலம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றால் தன்னுடையதும் தன்னைச் சார்ந்தவர்களிடமிருந்தும் அனுமதி பெறப்பட வேண்டும் என்று கல்முனையைச் சேர்ந்த ஹென்றி மஹேந்திரன் பகிரங்கமாக கூறியிருக்கின்றார். பிரதேச செயலாளர் காணி விடயங்களுக்கு பொறுப்பாக இருக்கத்தக்கதாக இவரிடம் அனுமதி பெற வேண்டும் என்று அவர் கூறுவது, இன்னும் அவர் ஒரு ஆயுத இயக்கத் தலைவர் என்ற மமதையிலும் தன்னை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை நாட்டு சட்டத்தினால் முடியாது என்ற தோரணையிலும் ஆகும்.
கல்முனையின் தந்தையாக இருந்த எம்.எஸ். காரியப்பரின் பெயரிடப்பட்ட வீதி நினைவுப் படிகத்தை பட்டப்பகலில் உடைத்த போதிலும் இந்த நாட்டின் சட்டம் அவரை இன்னும் தண்டிக்காத காரணத்தினால்தான் மீண்டும் கடந்த வாரம் வீடமைப்பு அதிகார சபையின் இக்டாட் நிறுவனத்தின் கிழக்கு தலைமைக் காரியாலயம் அமைக்கும் முயற்சியினையும் தடுத்தார். இவ்வாறு மீண்டும் முஸ்லிம்களை இனவாத அடக்கு முறைக்குள்ளாக்கும் செயல்களைச் செய்வதற்கு இவர்கள் இன்று துணிந்து வெளிப்பட்டிருக்கின்றார்கள்.
எனவே முஸ்லிம் விரோத சக்திகளின் இந்த அடாவடித்தனங்களை இனிமேலும் முஸ்லிம் இளைஞர்கள் பொறுமையாக பார்த்திருக்காமல் சரியான பதிலடி கொடுப்பதற்கு தயாராக வேண்டியது காலத்தின் கடமை என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அன்புக்குரிய முஸ்லிம் சமூகத்தின் புத்திஜீவிகளே அரசியல்வாதிகளே பாராளுமன்ற உறுப்பினர்களே இளைஞர்களே கல்முனை விவகாரத்தில் எல்லோரும் ஒற்றுமைப்பட்டு பலஸ்தீனர்களின் ஈமானிய பலத்தினையும் சமூக உணர்வினையும் படிப்பினையாக கொண்டவர்களாக கல்முனையை பாதுகாப்பதற்கான முழுமையான நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
அம்பாறை மாவட்ட முஸ்லிம் இளைஞர் ஒன்றியம்.
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் கல்முனை மாநகரை பொறுத்தமட்டில் கல்முனை மாநகரசபைக்கு உட்பட்ட பகுதியில் சோனகர்கள்(Moor) 71% தமிழர்கள் 29% ஆனால் நிலமோ தமிழர்களுக்கு 67% சொந்தம்.தமிழர்களை மீறி உங்களால் எதையும் கிழித்துவிட முடியாது இப்படி பலஸ்தீனியர்களை மேற்கோள் காட்டி அப்பாவி இளைஜர்களை உசுப்பேத்துவதை விட எதாவது ஆரோக்கியமான வழியை பாருங்கள்.
ReplyDeleteஇனி இந்த சிங்களவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆணிய புடுங்காலம் என நினைக்கும் முஸ்லிம்களின் கனவு ஒருபோதும் நடைபெறாது. கிழக்கிலே உள்ள எந்த ஊர் தமிழர்களை கேட்டாலும் எதோ ஒரு வகையில் முஸ்லிம்களால் பாதிக்கப்பட்டவர்களாகவே உள்ளார்கள். கல்முனை ம்ஸட்டுமல்ல சம்மாந்துறை புல்மோட்டை கிண்ணியா மருதமுனை நிந்தவூர் காத்தான்குடி என சகல ஊர்களுமே தமிழர்களிடம் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட கிராமங்களே. முதலில் இதை சகல முஸ்லிம்களும் உணர வேண்டும். உண்மையை உணராமல் ஆயிரம் தடவை பிரார்த்தனை செய்தும் பிரயாசனம் இல்லை.
ReplyDelete