கல்குடாவில் திறந்தவெளி பெருநாள் தொழுகை
ஹஜ்ஜூப்பெருநாளை முன்னிட்டு கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா அமைப்பு ஏற்பாடு செய்த திறந்த வெளியிலான விஷேட பெருநாள் தொழுகை செம்மண்ஓடை அல் ஹம்ரா வித்தியாலய மைதானத்தில் (சாட்டோ மைதானம்) இடம் பெற்றது.
பெருநாள் தொழுகையையும் விஷேட கொத்பா பேருரையையும்; கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா அமைப்பின் பொதுத்தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மது நடாத்தி வைத்தார்.
இதில் ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீறாவோடை, பிறைந்துரைச்சேனை, மாவடிச்சேனை செம்மண்ஓடை, காவத்தமுனை, மாஞ்சோலை போன்ற கிராமங்களைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment