Header Ads



குமார் சங்கக்கார, வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை

அரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும் என இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார தெரிவத்துள்ளார்.

சங்கக்காரவை எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவது குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், குமார் சங்கக்கார அறிக்கை ஒன்றின் மூலம் தனது அரசியல் பிரவேசம் பற்றி தெளிவுபடுத்தியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிட உள்ளதாக வெளியான தகவல்களை மிகவும் கரிசனையுடன் வாசித்தேன்.

பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் எனது அரசியல் பிரவேசம் தொடர்பில் வெளியிட்ட ஊகங்கள், எதிர்பார்ப்புக்கள் பற்றி நன்கு அறிவேன். சிலர் எனக்கு ஆதரவாகவும் சிலர் எனககு எதிராகவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

என்னைப் பற்றிய மாறுபட்ட அனைத்து கருத்துக்கள் விமர்சனங்கள் அனைத்தையும் சிரம் தாழ்த்தி மரியாதையுடன் ஏற்றுக் கொள்கின்றேன். எனினும் இந்த ஊகங்கள் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகின்றேன்.

நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் களமிறங்குவதற்கு திட்டமிடவில்லை. அவ்வாறான ஓர் உத்தேசம் கிடையாது. நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் பிரவேசிக்க மாட்டேன் என்பதனை மிகவும் உறுதிப்படக் கூற முடியும்.

வாக்களினால் தெரிவான அல்லது நியமிக்கப்பட்ட பொதுமக்கள் சேவகர்களின் மீது அளப்பரிய மரியாதை எனக்கு எப்போது உண்டு.

பொறுப்புக்கூறல், நேர்மை, வெளிப்படைத்தன்மை, மரியாதை போன்றவற்றை அரசியல்வாதிகளிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்.

கிரிக்கட்டிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டதன் பின்னர் எனது பிரதான நோக்கம் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது மட்டுமேயாகும். அறக்கட்டளைகளுடன் இணைந்து பல்வேறு சேவைகளை ஆற்றுவதற்கு விரும்புகின்றேன்.

கிரிக்கட் துறையில் தொடர்ந்தும் ஏதோ ஓர் வகையில் சேவையாற்றுவது குறித்தும் ஆலோசித்து வருகின்றேன்” என குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.