Header Ads



"மகிந்த ராஜபக்ச எம்மை, கேவலமாக திட்டுவார்"


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்களை விலங்குகளை போல் மிகவும் கேவலமாக திட்டுவார் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தங்காலை பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னை ஒரு உணர்ச்சிப்பூர்வமான தலைவராக அடையாளப்படுத்திக் கொண்டாலும் அண்மையில் அவரது பிரத்தியேக செயலாளரை ஊடகங்களுக்கு எதிரில் கீழ்த்தரமான முறையில் திட்டியது மக்கள் மத்தியில் அருவருப்பும், அவமதிப்பும் ஏற்பட காரணமாக அமைந்தது.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் சிறிய தவறுதல் நடந்து விட்டால், மகிந்த ராஜபக்ச எம்மை விலங்குகளை போல் திட்டியே அழைப்பார்.

இதனால், சிரேஷ்ட அமைச்சர்கள் பலர் மகிந்த மீது மிகவும் அதிருப்தி கொண்டனர். மகிந்த ராஜபக்ச தனது அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களை மிகவும் கேவலமாக திட்டுவார் எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. அப்போ......முஸ்லிம் அமைச்சர்களை எப்படியெல்லாம் கேவலமாக திட்டியிருப்பார்?

    ReplyDelete
  2. why can't he scold the tamil Ministers Mr. Punnakku

    ReplyDelete

Powered by Blogger.