நாட்டைவிட்டு வெளியேறியவர்களை மீண்டும், நாட்டுக்கு வரும்படி ரணில் அழைப்பு
யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறிய சகல இலங்கையர்களையும் மீண்டும் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாட்டுக்கு திரும்பி வரும் மக்களுக்கு சகல உதவிகளையும் செய்து கொடுக்க தயாராகவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று -08- பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், யுத்தத்தின் போது நாட்டை விட்டு வெளியேறிய அகதிகள் குறித்து பிரதமரிடத்தில் கேள்வி எழுப்பிய போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,
நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இலங்கை மக்கள் இலங்கையில் சுதந்தரமாக வாழ வேண்டும். ஆகவே யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறிய சகல இலங்கையர்களும் மீண்டும் இலங்கைக்கு வரவேண்டும். இதற்காக அரசாங்கமாக நாம் அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
நாட்டுக்கு திரும்பி வரும் மக்களுக்கு சகல உதவிகளையும் வாழ்வாதார நடவடிக்கைகளையும் செய்துகொடுக்க நாம் தயாராக உள்ளோம். அதேபோல் அகதிகளாக வெளியேறி இப்போது நாடு திரும்பியுள்ள மக்களின் நிலைமைகள் குறித்தும் நாம் ஆராய்ந்து அவர்களுக்கான அடுத்த கட்ட உதவிகளை செய்து கொடுப்பது குறித்தும் நாம் துரித நடவடிக்கைகளை முன்னெடுகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Invite them by your action, not by your words......
ReplyDeleteDear Mr. Prime Minister! Are you dreaming? what you can give? if they come back to SL? Bread and pol sambol? Please improve the law and order in the country. Treat all citizen equally and then all former Sri Lankan will return, don't worry!
ReplyDeleteNow people are suffering don't know what to do
ReplyDeletestealing and repaying the interest for earlier governments .
still not stable economy
மக்களின் கவனத்தைத் திருப்பும் மற்றுமொரு தங்கள் காரியங்களைச் சுமுகமாகக் கொண்டு செல்ல போடும் மற்றுமொரு ஜில்மார்ட். நாட்டையும் நாட்டின் பொருளாதார நிலைகளையும் உள்நாட்டில் இருப்பவர்களைவிட வௌிநாடுகளில் வாழும் இலங்கையர் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள். இந்த அழைப்புக்கு சரியான பதில் கடந்த நாட்களில் எதிர்பார்க்கலாம்.
ReplyDeleteThese guys are unable to resettle the local Muslim refugees who were victims of LTTE’s ethnic cleansing during 1990. How they are going to help foreig refugees?
ReplyDeleteநம்பி வந்தவர்கள் படும் அவஸ்தையை வெளியே சொல்வதில்லை அதனால் பிரதமர் இப்படி பகிரங்கமாக சொல்கிறார்(நானும் வந்த ஒருவன் )
ReplyDeleteWhy Mr. PM? Atleast let them have a peaceful life over there...
ReplyDelete