Header Ads



சத்துரவின் திருமணம் குறித்து, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்னவின் திருமண வைபவம் தொடர்பாக ஊடகங்கள் மூலம் பொய்யான மற்றும் அடிப்படையற்ற செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாக பிரதமரின் செயலகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்னவின் திருமணம், பிரதமரின் இல்லமான அலரி மாளிகையில் நடைபெறவில்லை எனவும், பிரதமரின் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் சத்துர சேனாரத்னவின் திருமணத்திற்கு மண்டபத்தை வழங்க முடியுமா என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு அமையவே மண்டபம் வழங்கப்பட்டது.

இந்த மண்டபம் அரச மற்றும் ஏனைய நிகழ்வுகளுக்கு வழங்குவது ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும் எனவும் பிரதமரின் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனினும் சிலர் கூறுவது போல் இலவசமாக வழங்கப்படவில்லை என்பதுடன், மக்களின் பணத்தை தவறாக பயன்படுத்திய சம்பவம் அல்ல. கட்டணம் செலுத்தியே சத்துர சேனாரத்னவின் திருமணத்திற்கு மண்டபம் பெறப்பட்டது.

அலங்கரிப்பு, உணவு, பானங்கள் வழங்கப்பட்டமையுடன் பிரதமரின் செயலகத்திற்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை சத்துர சேனாரத்னவின் திருமணம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெயான் சேமசிங்க,

“நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களின் திருமணங்களும் இப்படி நடக்க வேண்டும் என பிரார்த்திப்பதாகவும், சத்துர சேனாரத்னவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.