Header Ads



இலங்கை சோளத்தை, இத்தாலியில் பயிரிட்டு சாதித்த இலங்கையர்


ஐரோப்பிய மண்ணில் இலங்கையை சேர்ந்த தானிய வகையான சோளத்தை பயிரிட்டு வெற்றியடைந்த நபர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

25 வருடங்களுக்கு அதிகமான காலம் இத்தாலி வெரொனா நகரில் வாழும் இலங்கையர் ஒருவர், சோளத்தை வெற்றிகரமாக பயிரிட்டுள்ளார்.

மாரவில பிரதேசத்தை சேர்ந்த வியாநந்த தம்பகே , இத்தாலியிலுள்ள தனது வீட்டிற்கு அருகில் இருந்த காணியில் உள்ளூர் சோள வகையை வெற்றிகரமாக பயிரிட்டுள்ளார்.

விடுமுறைக்கு இலங்கைக்கு வந்த போது, தனது உறவினர் வழங்கிய உள்ளூர் நெல்லை அவர் இத்தாலிக்கு கொண்டு சென்று வெற்றிகரமாக பயிரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில், இந்த உள்ளூர் சோள செடிகள் 6 அடி அளவு வளர்ந்துள்ளது. ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகும் குளிர்காலத்திற்கு முன்னர் அறுவடை செய்வதற்கு அவர் எதிர்பார்த்துள்ளார்.

கடந்த வருடத்திலும் இவ்வாறு பயிரிட்டப்பட்ட போதிலும், குளிர் காலத்தில் அழிவடைந்துள்ளதாகவும், சூடான காநிலையில் நெற் செய்கை மேற்கொண்டு அறுவடை செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலி நாட்டு விவசாயிகளுக்கு இதனை அறிமுகப்படுத்தி வைக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறான பலர் முயற்சி மேற்கொண்ட போதும், இலங்கையர் ஒருவர் சோள செய்கை வெற்றி கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

1 comment:

Powered by Blogger.