Header Ads



முஸ்லிம்களுக்கு சாதகமான, தீர்மானத்தை எடுத்த ஐ.தே.மு.

மாகாண சபை தேர்தலுக்கான எல்லை மீள்நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது.

நாளைய வெள்ளிக்கிகழமை நாடாளுமன்றில் இந்த அறிக்கை விவாதத்துக்கு எடுக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.

இதன்போது தனது நாடாளுமன்ற உறுப்பினர்களை, குறித்த அறிக்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு ஐக்கிய தேசிய முன்னணி அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பான கடிதத்தை ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்கள், ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஐ.தே.முன்னணி அனுப்பி வைத்துள்ளதாகத் தெரியவருகிறது.

குறித்த எல்லை நிர்ணய அறிக்கையில் நிலவும் குறைப்பாடுகள் சிலவற்றைக் கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேற்படி எல்லை மீள்நிர்ணய அறிக்கை அமுல் செய்யப்படுமாயின் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என்று சிறுபான்மைக் கட்சிகள் தெரிவித்திருந்த நிலையிலேயே, ஐ.தே.முன்னணி அதனை எதிர்ப்பதென முடிவு செய்துள்ளது.

புதிய முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாயின், எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.