எல்லை நிர்ணய அறிக்கையை தோற்கடிக்க, சகலரும் எதிராக வாக்களிக்க வேண்டும் - முஸ்லிம் கட்சிகள் மௌனம்
மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் நாளைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெறும் விவாதம் தொடர்பில் கலந்துரையாட விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற விவாதம் தொடர்பில் கட்சி தலைவர்களின் நிலைப்பாடு குறித்து ஆராயப்படும் என அமைச்சர் மனோ கணேசன் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
அத்துடன், இன்றைய தினம் மாலை ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களின் கூட்டம் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, அமைச்சர் மனோ கணேஷன் உள்ளிட்ட சில கட்சிகளின் உறுப்பினர்கள் நாளை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற விவாதத்தின் போது எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எல்லை நிர்ணய அறிக்கையை தோற்கடிக்க அனைத்து தரப்பினரும் எதிராக வாக்களிக்க வேண்டும் எனவும் அமைச்சர் மனோ கணேஷன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment