முஸ்லிம் பெண்கள் ஏன், ஹிஜாப் அணிகிறார்கள்..?
(ஜே.எம்.ஹாபீஸ்)
ஒரு மொழியை கற்பது என்பது அந்த இனத்தின் கலாச்சாரத்தை விளங்கிக்கொள்வதாகும். ஒரு மொழியைப் பயில்வதால் அப்பிரிவின் கலாச்சாரம் சகவாழ்வு என்பனவற்றையும் கட்டி எழுப்புவதாக கருத முடியும். நாம் மற்றவர்களை விளங்கிக் கொள்ள வேண்டும். அதற்கு பல அடிப்படை விடையங்கள் தேவை என்று முன்னாள் அமைச்சரும் தேசிய சகவாழ்வுக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான இம்டியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.(26.8.2018).
திகனைப் பிரதேசத்தில் நடந்த கூட்டம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது-
ஒரு மொழியை கற்பது என்பது அந்த இனத்தின் கலாச்சாரத்தை விளங்கிக்கொள்வதாகும். ஒரு மொழியைப் பயில்வதால் அப்பிரிவின் கலாச்சாரம் சகவாழ்வு என்பனவற்றையும் கட்டி எழுப்புவதாக கருத முடியும். நாம் மற்றவர்களை விளங்கிக் கொள்ள வேண்டும். அதற்கு பல அடிப்படை விடையங்கள் தேவை. ஏன் பௌத்த துறவிகள் காவி உடை அணிகிறார்கள்?. முஸ்லிம் பெண்கள் ஏன் ஹிஜாப் அணிகிறார்கள்? தமிழ் பெண்கள் ஏன் நெற்றியில் பொட்டு வைப்கிறபர்கள்? குங்குமம் வைப்பது எதற்கு? என்பதை பரஸ்பரம் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். அப்படியாயின்தான் ஒருவரை ஒருவர் புரிதல் மட்டுமல்ல இனங்களுக்கிடையிலான சகவாழ்வு சகோதரத்துவம் புரிந்துனர்வு என அனைத்து அடையாளங்களும் பாதுகாக்கப்படும்.
நான் கொழும்பில் பௌத்த பாடசாலையில் கல்வி பயன்றேன். நான் வேற்று மத்தவன் என்ற உணர்வு எனக்கு ஏற்பட வில்லை. திறமையானவன் இன வாதத்தை தூக்கிக் பிடிக்கமாட்டான். இயலாமையை மறைக்கவே ஒருவன் இனவாதம் பேசுவான். இந்த விச வித்துக்களை நாம் வளர்க்கக் கூடாது. அதன் தாக்கத்தில் மாட்டிக்கொள்ளக்கூடாது. இன்று சர்வதேச அரசியலும் ஏனைய விடயங்களும் அவ்வாறேதான் உள்ளது.
ஈராக்கிற்கு என்ன நடந்து. ஈரானில் என்ன நடந்தது. அப்கானிஸ்தானில் என்ன நடந்தது. ஈராக் அதிபர் சதாம் ஹ-சைனிடம் கொடிய ஆயுதங்கள் இருப்பதாகவும், அணு ஆயுதம் இருப்பதாகவும் குற்றம் சாட்டி தேடுதல் நடத்தினர்கள். பாரிய யுத்தம் இடம் பெறறது. இலட்சக் கணப்பான மக்கள் கொள்ளப்பட்டனர். கலாச்சாரப் பொக்கிசங்கள் வகைதொகை இன்றி அழிக்கப்பட்டன. பல்லாயிர் கோடி பெறுமதியுள்ள இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டன. எண்ணெய்கிணறுகளை சூரையாடினர். இப்போது என்ன சொல்கிறார்கள். அப்டி ஏதும் கொடிய ஆயுதங்களோ அணு ஆயுதங்களோ ஈராக்கில் இல்லை என்கி;ன்றனர். சதாம் ஹ-சைன் கொள்ளப்பட்டாகி விட்டது. ஈராக்கை நாசம் செய்து அது அழிந்து விட்டது. இனி பழைய நிலையைக் கட்டி எழுப்ப முடியாது. இப்போது அங்கு அப்படி எதுவித ஆயுதமும் இல்லை என்பது தீர்வாகாது.
ஒல்லாந்தர், போர்த்துக்கேயர், ஆங்கிலேயர் எனப் பலபிரிவினர் இலங்கைக்கு வருகை தந்த போதும் அரேபியர்களின் வருகையுடன் ஒப்பிடும் போது முற்றிலும் மாற்றமானதாகும் அவர்கள் அனைவரும் நாடுபிடிக்கும் ஆசையிலேதான் வந்தார்கள். ஆனால் ஆராபியர்கள் வர்த்தக நோக்கில் வந்தார்கள். ஒல்லாந்தர், போர்த்துக்கேயர், ஆங்கிலேயர் எனப் பலபிரிவினர் இலங்கைக்கு வருகை தந்த போதும் அரேபியர்களின் வருகையுடன் ஒப்பிடும் போது முற்றிலும் மாற்றமானதாகும். இதுதான் ஏனை சர்வதேச குழுக்களின் இலங்கை வருகைக்கும் அரேபியர்களின் வருகைக்கும் இடையிலான வித்தியாசமாகும். அதாவது அரேபியர் வருகை ஏனைய எல்லாப்பிரிவினரின் வருகையிலிருந்தும் பாரிய வித்தியாசம் கொண்டது. ஏனையவர்கள் நாடு பிடிக்கும் ஆசையில் வர அராயியர் வர்த்தக நோக்கில் வந்து எம்மை வளமும் செழிப்பும் அடையச் செய்தனர். 1000 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றில் அராபியர்கள் நாடு பிடிக்க இலங்கை;ககு வந்த வரலாறு எங்கும் இல்லை. ஆனால் ஒல்லாந்தரோ, போத்துக்கேயரோ, ஆங்கிலேயரோ, பறங்கியரோ நாடு பிடிக்க வந்த வரலாறே எங்கும் உள்ளது.
இலங்கையின் முதலாவது முஸ்லிம் பள்ளி மஸ்ஜிதுல் அப்ரார். இது பேருவலைப் பிதேசத்தில் உள்ளது. எனது பிரதேசமும் அதுவாகும். இப்பள்ளி 900 வருடங்களுக்கு மேல் பழைமையான என்பதற்கான ஒரு சியாரம்(அடக்கஸ்தலம்) அதாரமாக உள்ளது. அதாவது சுமார் 900 வருடங்களுக்கு முன்பு வாழந்த ஒரு முஸ்லிம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆகவே 900 வருடங்களுக்கு முன்பே முஸ்லிம்கள் இலங்கையில் குடியேறியுள்ளனர் என்பதாகும்.
கண்டிப் பகுதி முஸ்லிம் மக்களது பரம்பரைக் குடும்பப் பெயர்கள் சிங்களப் பெயர்களாகவே உள்ளன. எனது மனைவியும் கண்டிப்பகுதியைச் சேர்ந்தவர் அவரது பரம்பரைக் குடும்பப் பெயரும் (வாசகம) அவ்வாறேதான் காணப்படுகிறது. நாம் சிங்களவர்களுடன் இனைந்து வாழ்கிறோம்.எனவே அவர்களது மொழி கலாச்சாரம் என்பவற்றை நாம் சரியாக விளங்கிக் கொள்ளவேண்டும்.
நாம் எப்போதும் எமது அயல் நாடுகளை அனுசரித்துச் செல்லாவிட்hல் முன்னேற முடியாது. அதேபோல் உள்ளுர் இனக்குழுக்களிடையே ஒற்றுமையும் தேவை. நாம் ஆசியாவில் மிகச் சிறந்த ஒரு நாடாக 1950 களில் இருந்தோம். யப்பானுக்கு மட்டுமே இரண்டாம் இடத்தில் இருந்தோம். கல்வி பொருளாதாரம் கலைகலாச்சாரம்,அரசில், சுகாதாரம் என்று எல்லாவற்றிலும் முன்னின்ற நாம் இப்போது பின்தள்ளப்பட்டுள்ளோம். காரணம் என்ன? உள்நாட்டு வீண் பிரச்சினைகன். 1972 ல் உள்ளநாட்டுக்கலவரம் பின்னர் 83, 89 இப்படியாக பின்னர் 30 வருட யுத்தம். இப்படி உள் விவகாரங்களுக்கு எமது காலத்தையும் நேரத்தையும் வளங்களையும் செலவிடும் போது எப்படி முன்னேறுவது? பிரிவினையையும் பிரிவினை வாதத்தையும் தவிர்க்கவேண்டும். மொழி கட்டாயம் தேவை. தாய் மொழியைக் கைனவிட முடியாது. அதற்காக மொழியை அடிப்படையாகக் கொண்ட பிரிவினையை தோற்றுவிக்கத் தேவையில்லை.
எனது தந்தை 1956ல் ஒரு புத்தகம் எழுதினார். ஆஸிக் மரைக்கார் என்பருடன் இணைந்து அதனை எழுதினார். அதன் பெயர் 'ஏ சிங்களம்' என்பதாகும். ஆதை எழுதியதற்காக அவரைத்தூற்றினர். 60 வருடங்களின் பின் என்ன நடந்தது. இப்போது எமக்கு சிங்களம் தேவை என தூற்றிய எமது மக்கள் வேண்டுகின்றனர். சிங்கள ஆசிரியாகளைப் பாடசாலைகளுக்கு வேண்டும் எனக்; கேட்கின்றனர்.
சிங்கள சமூகத்துடன் சகோதர வாஞ்சையோடு நாம் வாழவேண்டும். நான் அண்மையில் கேள்விப்பட்டேன் கொழும்பு சாஹிரா கல்லூரியில் 25 சத வீதம் சிங்கள மாணவர்கள் கல்வி கற்பதாக. இதுதான் நாட்டுக்குத் தேவை. தமிழ்ப் பாடசாலைகளில் சிங்களப் பிரிவும் சிங்கள மாணவருக்கு குறிப்பிட்ட இடஒதுக்கீடும், சிங்களப் பாடசாலைகளில் தமிழ் மொழிப்பிரிவும் தமிழ் மொழி மாணவர்களுக்கா குறிப்பிட்ட ஒதுக்கீடும் ஏற்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் நாம் எதிர் பாக்கும் இலக்கை அடைய முடியும் என்றார்.
1956ல் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களம் சட்டமே, ஆசியாவில் இரண்டாம் இடத்தில் இருந்த எம்மை இறுதி நிலைக்கு கொண்டுவரக் காரணமாக அமைந்தது.
ReplyDeleteஇலங்கைத் தமிழர்களதும் முஸ்லிம்களதும் தாய் மொழியாகிய தமிழிலும் சகல அரச காரியங்களையும் சாதித்துக்கொள்ள முடியுமான ஓர் சூழலை உருவாக்க முடிந்திருக்கும் என்றால் யாரும் தனிநாடு கேட்டும், யுத்தம் செய்து அழிவுகளை ஏற்படுத்தியும் இருந்திருக்க மாட்டார்கள்.
இந்தத் தவறை இப்போதாகிலும் நம் தலைவர்கள் உணர்ந்து உடனடியாகத் திருத்திக் கொள்ளாவிட்டால் இன்னும் 60 வருடங்களின் பின்பும் இதே போன்று நடந்த அழிவுகளை ஞாபகப்படுத்திக் கொண்டிருப்பதுதான் நம் விதியாக இருக்கும்.
மும்மொழிகளும் சகல பாடசாலைகளிலும் கட்டாயமாக்கப்படல் வேண்டும். அவற்றில் தேர்ச்சி பெற்றோருக்கே அரச பணிகள் வழங்கப்பட வேண்டும்.
அப்போதுதான், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு, நீதம் செலுத்தப்பட்ட நல்லிணக்க உணர்வோடு வாழ்ந்து, நாம் எதிர்பார்க்கும் இலக்கான வளமும் அமைதியும் நிறைந்த இலங்கையை அடையலாம்.
Hijab is a Saudi dress. Saudis wear this dress for their climate.It protects them from sand storm. This dress doesn't have any religious value nor it was told in Quran. Indonesian and Malaysian wear their own traditional dress.We must wear Saudi dress. Earlier,our females wore dress suitable to our country. We must not copy Saudi Dress. One day , Sinhalese youths will undress our females in Public Highways. Earlier, some Muslim females were thrashed in Beruwala. Our politicians do not have guts to caution our females.
ReplyDeleteMr.Imthiyas Does not know that Arabs had connection with Srilanka before Islam and more than 2000 years.Arabs good traders and travelers.They came to srilanka for Gem & spices.This knowledge of Gem & trading carried from generation to generation..That is what that Muslims are pioneers in specially in Gem trade.They married local ladies and settled here.
ReplyDeleteWhen they heard about Islam spreading in Arabia,sent delegation to Arabia to know about Islam.In Srilanka All the people came from out side.Sinhalese are the descendants of the Bangali Aryans.Bangali people and Srilankan Sinhalese are same body shape,colour and same new year date is the evidence to prove that.
When we talk about the religion that too came from out side.Lord Buddha is Nepali National Sinhalese are following Nepali religion.Muslims following Arabia's religion,Tamils following India's religion.So all the religion and all the people are outsiders.But Buddhist talking like Lord Buddha is a Srilankan and Buddhism is Srilanan.If Buddhist
can follow the Nepali man's religion why others cannot follow their relgion.If they can follow Buddhist culture why others cannot their culture.But because of their numbers and power want to dominate other ethnic group and want to show they are unique people without nothing. So when they see other people are doing well and up they cannot tolerate, feel jealous as they cannot prove their superiority.So they want to suppress everything above them.Such feeling is not civilized but barbaric.Yet they call they are great?
Muslims cannot live separately independently.
ReplyDeleteWe minorities living almost all part of country mixing other communities . We cannot ask for separate ruling geographical area.
SRI LANKA NOT A ISLAMIC COUNTY AS SOME OUR POLITICIAN AND SOME PEOPLE THINKS
Coexistence our ancestors had so far have to continued . Two three decades ago number of Singhalese dominated areas Muslim's were
Chairman of local government. Muslims were elected as their representative
From recently our politicians leading communal parties for thier own personal benefits divided us from main stream and their
actions talks made suspension among majority
That's what our community face now.We have to find solutions and gentlemen politicians
like Hon Bakeer Marker should come forward for in the name of our community