"நாம் செய்த தவறுகள், எமக்கு தெரியாமல்போனது"
தேர்தல் முறையை குறைகூறி மாகாண சபைகளுக்கான தேர்தலை காலங்கடத்தக்கூடாது என தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேர்தலை எந்தமுறையில் நடத்தினாலும் அதில் தாம் வெற்றிப்பெறுவோம் எனவும் தெரிவித்துள்ளது.
கேகாலை மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், கடந்த ஆட்சிக் காலத்தில் நாம் செய்த தவறுகள், ஆட்சியில் இருந்ததால் எமக்கு தெரியாமல்போனது. ஆனால் தற்போது அந்த தவறுகளை திருத்திக்கொண்டு அடுத்த தேர்தலுக்கு தயாராகியுள்ளோம் எனவும் அவர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழீழ விடுதலை புலிகளின் உயிர்களை காப்பாற்றியமைக்காக ஜி.எஸ்.பி வரிச்சலுகையை இழந்தார். ஆனால் நல்லாட்சி அரசாங்கம் துக்கிலிட்டு கொலை செய்யப்போவதற்காக ஜி.எஸ்.பி வரியை இழக்கப்போகிறது எனவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, மத்தல விமான நிலையத்தின் விலையை குறைக்க வேண்டுமென இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளதாகவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
Post a Comment