Header Ads



சமகால அரசியல் மற்றும் கல்முனை பிரதேச பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான கலந்துரையாடல்


கல்முனை பிரதேச பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்கு அரசி கம்பெரலிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்வது மற்றும் சமகால அரசியல் என்பன தொடர்பான கலந்துரையாடல் இன்று (31) வெள்ளிக்கிழமை மாலை கல்முனை ஆசாத் பிலாசா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடல் நிகழ்வில் கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் வைத்திய கலாநிதி எஸ்.எம்.ஏ. அஸீஸ், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.சி.ஏ. சத்தார், சட்டத்தரணி அன்புமுகைதீன் றோஷன், ஏ.எம். பைறூஸ், எம்.எஸ்.எம். நிசார், கல்முனை மசூரா குழுத் தலைவர் யூ.எல்.காசிம், அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான கே.எம். தௌபீக், நௌபர் ஏ. பாவா மற்றும் கல்முனை பிரதேச நலன் விரும்பிகள், கல்முனை பிரதேச பள்ளிவாசல்களின் நிர்வாக சபை தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது கல்முனை பிரதேச பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான திட்ட அறிக்கைகளை விரைவுபடுத்தி சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக கல்முனை மாநகர சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் உதவியினையும் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

மேலும் இதன்போது சமகால அரசியல் மற்றும் கல்முனை அபிவிருத்தி தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. 
(அகமட் எஸ். முகைடீன்)

No comments

Powered by Blogger.