Header Ads



கோத்தபாயவுக்கு எதிராக அமெரிக்கா...?

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் அரசியல் பிரவேசத்தை தடுக்கும் தீவிர முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக கோத்தபாய ஈடுபட ஆர்வம் காட்டி வருகிறார். இதனை தடுப்பதற்காக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தினால் இரகசிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தலைவர் மெக்ஸ்வெல் பரணகமவை சந்தித்த அமெரிக்க தூதரகத்தின் பிரதானிகள் சிலர், கோத்தபாயவுக்கு எதிராக உள்ள போர்க்குற்றம் தொடர்பான தகவல்களை கேட்டறிந்துள்ளனர்.

2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய போட்டியிடுவதனை தடுப்பதற்காக, அவருக்கு எதிராக உள்ள போர் குற்றச்சாட்டு அறிக்கை தங்களுக்கு அவசியமான உள்ளதென இந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் வெளியிட்ட வெள்ளை கொடி விவகாரம் தொடர்பிலும், கடத்தல் தொடர்பான மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவில் வெளியாகிய தகவல்களுக்கும், கோத்தபாய ராஜபக்சவுக்கு தொடர்பு உள்ளதாக என அறிந்து கொள்ள அமெரிக்கா ஆர்வமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விசேடமாக விடுதலை புலிகள் அமைப்பின் பொலிஸ் மா அதிபர் நடேசனை கொலை செய்வதற்கும் கோத்பாய உத்தரவிட்டாரா என அமெரிக்கா ஆராய்ந்துள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் இவ்வாறான செயற்பாடு ராஜபக்ஷ ரெஜிமென்டுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனையில் உள்ளதாக தெரிய வருகிறது.

இதேவேளை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சீன நிறுவனம் ஒன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, பெருந்தொகை நிதியை வழங்கியதாக அமெரிக்க ஊடகமாக நிவ்யோர்க் சஞ்சிகை தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. அமேரிக்க, இந்தியா, மேற்கு நாடுகள் ஆகியவற்றின் அரசியல் வழிநடத்தல்கள் காலத்தின் தேவை

    ReplyDelete
  2. So called hierarchy proposes and God disposes. This is the best example for the above news item.

    ReplyDelete
  3. உலகின் எந்தவொரு தேசத்திலும் ஒரு மணி நேரத்திற்குக் கூட சமாதானத்தை நிலைநாட்டிக் காண்பிக்க முடியாத மேற்குலக நாடுகளின் அரசியல் வழிநடத்தல்கள் இனவாதிகளுக்குக் காலத்தின் தேவைதான்.

    ReplyDelete

Powered by Blogger.