Header Ads



ஞானசாரருக்கு ஏற்பட்டுள்ள அலலம்...!

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும், பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பார்க்க ஒரு மாதகாலம் வரை எவருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலை நடைமுறைகளுக்கு அமைய கைதி ஒருவரை பார்க்க மாதம் ஒரு முறை மாத்திரமே அனுமதி வழங்கப்படும். மூன்று பேருக்கு மட்டுமே அந்த அனுமதி வழங்கப்படும்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக ஞானசார தேரருக்கு கடந்த 8ஆம் திகதி சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கு அமைய அவரை அடுத்த மாதம் 8ஆம் திகதியே பார்க்க அனுமதி வழங்கப்படும்.

இந்த நிலையில், ஞானசார தேரரின் காவியை கழற்றி விட்டு, ஜம்பர் அணிவிக்குமாறு நீதியமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக ஞானசார தேரருக்கு 19 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன் 6 ஆண்டுகளில் அதனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

எவ்வாறாயினும் சிறுநீரகம் சம்பந்தமான சிகிச்சைக்காக ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

Powered by Blogger.