Header Ads



பொது வேட்பாளர் என்றால், பொங்கியெழும் பொன்சேக்கா

2020 ஜனாதிபதி கட்சி தனது சொந்த வேட்பாளரை நியமிக்கவேண்டும் என அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும்காலங்களில் பொதுவேட்பாளர் என்ற சிந்தனையே இருக்ககூடாது அவ்வாறான  எண்ணத்தை புறக்கணித்துவிடவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2020 ஜனாதிபதி தேர்தலில் இரு பிரதான கட்சிகளும் தனித்தனியாக தங்கள் வேட்பாளர்களை நிறுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுவேட்பாளரை நிறுத்துவது என்ற  சிந்தனையே இலங்கையின் அரசியல் கலாச்சாரத்திலிருந்து அகற்றவேண்டும் என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச மீண்டும் தேர்தலில் போட்டியிட்டால் அது மக்களின் விருப்பங்களிற்கு மாறானதாக அமையும் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அரசியலில் காணப்படும் பலவீனங்களை மகிந்த ராஜபக்ச எப்போதும் பயன்படுத்த முனைவார் எனவும் சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.