Header Ads



கண்டியில் முதன் முறையாக, ஈரல் மாற்று சத்திர சிகிச்சை வெற்றியளிப்பு


கண்டி பெரிய ஆஸ்பத்திரியில் முதன் முதலாக ஈரல் மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நான்கு சத்திர சிகிச்சை நிபுணர்கள், ஆறு விசேட நிபுணர்கள் உள்ளிட்ட வைத்திய குழுவினரது 12 மணித்தியால போராட்டத்தின் பின்னர் இதனை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

ஈரல் பாதிக்கப்பட்டு, கண்டி பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த கண்டி பன்வில பிரதேசத்தை சேர்ந்த 64 வயது சரத் வீரகோன் என்பவருக்கு கடந்த வாரம் ஈரல் மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சத்திர சிகிச்சைக்கப் பின்னர் இவர் பூரண சுகமடைந்துள்ளதோடு அவர் வீடு செல்ல தயாராகவிருப்பதாக கண்டி வைத்தியசாலை பணிப்பாளர் ​ெடாக்டர் சமன் ரட்நாயக்க தெரிவித்தார். வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட ஈரல் மாற்று சத்திர சிகிச்சை தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவு படுத்தும் ஊடக சந்திப்பு நேற்று நடைபெற்றது.இதில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டாறு தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த பணிப்பாளர்,

கண்டி பொலிஸ் நிலையத்தில் ஊர்காவற்படை வீரராக பணியாற்றுகையில் திடீர் பாதிப்பினால் மூளைச்சாவடைந்திருந்த நபரின் ஈரலே தானமாக வழங்கப்பட்டிருந்தது. அவரின் குடும்பத்தினரின் விருப்பத்துடனே இந்த ஈரல் மாற்று சிகிச்சை நடத்தப்பட்டது.

இந்தியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஈரல் மாற்று சத்திர சிகிச்சைகள் இடம் பெறுகின்றன. இதற்காக அதிக செலவு செய்யப்படும் நிலையில் ஒரு ரூபா கூட செலவின்றி இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு 10 இலட்சம் ரூபா அரசாங்கத்தினால் செலவிடப்பட்டுள்ளது. சிறுநீர் சத்திர சிகிச்கை நிபுணர் வைத்தியர் பீ.கே. ஹரீச்சந்திரவினது வரிகாட்டலில் வைத்திய ஆலோசகர் மற்றும் வைத்திய நிபுணர்களான சரித்த வீரசிங்கவினால் இந்த சத்திர சிகிச்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

எம்.ஏ.அமீனுல்லா

No comments

Powered by Blogger.