Header Ads



ஆர்ப்பாட்டம் செய்த மகிந்தவுக்கு, ஜனாதிபதி தெரிவித்துக் கொள்வது...!

எமது நாட்டை எவருக்கும் தாரைவார்க்கவும் இல்லை, எதிர்காலத்தில் தாரைவார்க்கப் போவதுமில்லையென இன்று(02) மாலை  கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.

பொலன்னறுவையில் இன்று (02) இரண்டாவது நாளாகவும் நடைபெற்ற எழுச்சி பெறும் பொலன்னறுவை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இந்த நாட்டின் இராணுவத்தை காத்தது நானும் எனது அரசாங்கமும் என்பதை இவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்று பேசப்பட்ட சர்வதேச யுத்தக் குற்றச்சாட்டுக்கள், அன்று பேசப்பட்ட மின்சாரக் கதிரை, அன்று பேசப்பட்ட சர்வதேச நீதிபதிகள் என்பவற்றுக்கொல்லாம் முற்றுப்புள்ளி வைத்தது நாம். அவற்றுக்கு முகம்கொடுக்க முடியாமல் போய்த்தான், இரண்டு வருடங்கள் முன்னதாக தேர்தலை நடாத்த கடந்த அரசாங்கத்துக்கு ஏற்பட்டது.

எமது இந்த தாய் நாட்டை உலகிலிருந்து அன்னியமாக்கினார்கள். ஐ.நா.வின் இலங்கைக்கான தூதுவர் காரியாலயத்தின் முன்னாள் அமைச்சர் ஒருவர் உண்ணாவிரதம் இருந்தார். இந்த உண்ணாவிரதத்தை முடிப்பதற்கு அரச தலைவர் போய் இளநீர் கொடுத்த போது ஐ.நா. எமக்கு எதிரியாக மாறியது.

கடந்த 2015 ஜனவரி 08 ஆம் திகதியின் பின்னர் இந்த நாட்டை சர்வதேசத்துக்கு நெருக்கமாக்க அரசாங்கம் முன்னெடுத்த முயற்சிகள் வெற்றியளித்துள்ளன. இந்த நாட்டு மக்கள் எம்மிடம் முன்வைத்த பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு தேடிக் கொடுத்துள்ளோம் எனவும் ஜனாதிபதி மேலும் கூறிப்பிட்டார்.

கூட்டு எதிர்க் கட்சியினரால் அரசாங்கத்துக்கு எதிராக இன்று ஜனபல சேனா எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. லிப்டன் சுற்றுவட்டத்தில் கூட்டு எதிர்க் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

1 comment:

  1. Yahapalanaya effort is Zero; Every thing happened by defualt when the people gave a mandate.

    ReplyDelete

Powered by Blogger.