ஜனாதிபதி, பிரதமரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி
புரிந்துணர்வுக்கான சிறந்த எடுத்துக் காட்டே இந்த ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உலகெங்கும் வாழும் லட்சக் கணக்கான முஸ்லிம்கள் மக்கா நகரில் ஒரே குறிக்கோளுடன் ஒன்றிணைந்து மானிட சமூகத்தின் ஏகோபித்த எதிர்பார்ப்பான ஒற்றுமையின் பெருமையை உலகறியச் செய்யும் திருநாளாக ஹஜ்ஜுப் பெருநாள் காணப்படுகின்றது.
சமூக சகவாழ்வின் மகிமையை உலக மக்களுக்கு எடுத்தியம்பும் ஒரு முதன்மையான சமய நிகழ்வாக ஹஜ்ஜுடைய நிகழ்வுகள் அமைந்துள்ளதாகவும் ஜனாதிபதி விடுத்துள்ள நீண்ட வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறியுள்ளார்.
2
ஹஜ் உணர்த்தும் தியாகம் உலகிற்கான சிறந்த முன்மாதிரி என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் கூறியுள்ளார்.
சமத்துவம், சகோதரத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கு தியாகம் முக்கியமானதாகும். அந்த தியாகத்தை உலகிற்குப் போதிக்கும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் உலகிற்கு நல்லதொரு படிப்பினை தரும் முன்மாதிரியாகும் எனவும் பிரதமர் தனது நீண்ட வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment