Header Ads



என்னை யாராவது, ஹிட்லாராக மாறு எனக் கூறினால்...?

நெப்போலியன் போன்ற ஆட்சியாளர்கள் நாட்டுக்கு தேவையில்லை எனவும், சில ஊடங்கள் இன்னும் மகாராஜா என்ற எண்ணக்கருவில் இருந்து வருவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கேகாலையில் அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகள் மூச்சு விட ஆரம்பித்த ஆண்டுகள். நாங்கள் நாட்டை பொறுபேற்கும் போது நோயாளி உயிர்வாழ உதவி தேவை என்ற நிலைமையில் நாடு காணப்பட்டது.

அவசர சிகிச்சைகளை வழங்கி இந்த நோயாளியை குணமடையும் நிலைமைக்கு எம்மால் கொண்டு வர முடிந்தது.

நாம் வழங்கியுள்ள சுதந்திரத்தின் மூலம் எந்த கருத்தையும் வெளியிட முடியும். இணையத்தளங்கள் வழியாக உண்மை மற்றும் பொய்யான செய்திகளை பிரசாரப்படுத்த முடியும்.

நாம் தற்போது ஜனநாயக சூழ்நிலையில் உள்ளோம். எதிர்காலத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம். தேர்தலை தேர்தலை ஆணையாளரே நடத்துவார். அனைத்தும் எந்த சிக்கல்களும் இன்றி நடக்கும்.

நாட்டில் ஜனநாயகம் இல்லை என்பது போல் ஊடகங்கள் கூறுகின்றன. ஊடகங்கள் இன்னும் மகாராஜா என்ற எண்ணக்கருவில் உள்ளன. மகாராஜாக்கள் இருக்கும் நாட்டில் ஜனநாயகம் இருக்காது.

என்னை யாராவது ஹிட்லாராக மாறுங்கள் எனக் கூறினால், அது தவறானது என நான் சுட்டிக்காட்டுவேன். எனினும் கோத்தபாய ராஜபக்ச அந்த கருத்தை கண்டிக்கவில்லை.

அவ்வாறாயின் ஊடகங்கள் அவரை விமர்சித்திருக்க வேண்டும். எனினும் இலங்கை ஊடகங்கள் அவரை விமர்சிக்கவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. ஹிட்லர் நாட்டின்,மக்களின் பணத்தைச்சூறையாடியதாக வரலாற்றில் பதியப்பட்டதாகத் தெரியவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.