Header Ads



குமார் சங்ககாரவின் அறிவுரை

இலங்கையில் கடந்த காலங்களில் எதிர்நோக்கப்பட்ட பாதிப்பான சமூக மற்றும் அரசியல் சம்பவங்கள் காரணமாக நாட்டுக்குள் உளவியல் சம்பந்தமான மனநோய்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.

உளவியல் நோய் காரணமாக நடக்கும் தற்கொலை சம்பவங்களை தடுப்பதற்கான ஆலோசனை சேவைகளை வழங்கும் தொண்டர் அமைப்பு ஒன்றின் அனுசரணையில் நடத்தப்பட உள்ள சைக்கிளோட்டம் சம்பந்தமான தெளிவுப்படுத்தும் நிகழ்வில் வைத்து சங்ககார இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், 30 ஆண்டுகள் நடந்த போர், சுனாமி அனர்த்தம் என்பன காரணமாக இலங்கையில் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளமை மற்றும் பரீட்சையில் தோல்வி என்பன மக்களின் உளவியல் நோய் தாக்கங்கள் அதிகரிக்க ஏதுவாக அமைந்துள்ளன.

இலங்கையில் பலர் உடல் ஆரோக்கியம் பற்றி பகிரங்கமாக பேசினாலும் உளவியல் ஆரோக்கியம் பற்றி பேச தயக்கம் காட்டுகின்றனர்.

இதனால், உளவியல் ரீதியான பிரச்சினைகளை அடக்கி வைத்து கொண்டு அமைதியாக இருப்பதால், இலகுவாக மன அழுத்தம் போன்ற நோய்களுக்கு உள்ளாகின்றனர்.

இப்படியானவர்கள் தற்கொலை போன்றவற்றுக்கு தூண்டப்படுகின்றனர் எனவும் குமார் சங்ககார குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.