ஞானசாரருக்கு வெள்ளிக்கிழமை சத்திரசிகிச்சை
பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 19 வருட கடூழிய சிறைத்தண்டனையை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கின் தீர்ப்பிலேயே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் (06) ஞானசார தேரர், சிறுநீரக பிரச்சினை காரணமாக, ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையின் 5 ஆவது மாடியில் சிகிச்சை பெற்று வரும் அவர், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10) சத்திரசிகிச்சையொன்றுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக, வைத்தியசாலையின் பணிப்பாளர் சுசித் சேனாரத்ன தெரிவித்தார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை சிறையில் அடைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
முழு வாழ்க்கையையும் பொய்யுடனும் நாடகமமுமாகவே கடத்தும் இவனெல்லாம் ஒரு மதத்தலைவனாம். மாபெரும் கோழை.
ReplyDeletehe should not come back. time to die.
ReplyDeleteavvalavu peraccanaya evaruuku nambamudiyavillayappa nambamudiyavillayappa
ReplyDelete