வாகனங்களுக்கான வரி அதிகரிப்பு
1000 சிசி எஞ்சின் அளவை விட குறைவான வாகனங்களுக்குறிய தயாரிப்பு வரி ஆகஸ்ட் மாதம் 01ம் திகதி முதல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
நிதியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி அவ்வகையான வாகனங்களுக்கான தயாரிப்பு வரி 15 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் 1000 சிசி எஞ்சின் அளவை விட குறைவான மின் சக்தியிலும் இயங்கக் கூடிய ஹைப்ரிட் வகை வாகனங்களின் தயாரிப்பு வரி 1,250,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் 2018 ஆகஸ்ட் மாதம் 01ம் திகதிக்கு முன்னர் கடன் பத்திரம் (LC) ஆரம்பிக்கப்பட்டு 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதிக்கு முன்னர் அனுமதிபெற்ற வாகனங்களுக்கு இந்த வரி ஏற்புடையதாகாது.
இந்த காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்படும் வாகனம் முன்பிருந்த எஞ்சின் வலுவின் அடிப்படையிலான தயாரிப்பு வரிக்கு உற்பட்டதாக இருக்கும் .
உலகில் எங்குமில்லாத வாகன விலையும் வாகன வரி உயர்ந்துகாணும் ஒரே நாடு இலங்கையில் மட்டுமே.வாகனம் விலையுயர்ந்த அரசாங்கம் சொல்லும் காரணம் இலங்கையில் அதிகம் வாகனம் இருக்கின்றதாம் அதை குறைக்க தான் வாகன இறக்குமதி வரி கூடுதலாக அரவிடுகின்றதாம்,வாகனம் அதிகமாக காணப்படுகின்ற என்றால் அரசாங்கம் நிறைய பாதைகளை செய்ய வேண்டும் அப்படியில்லாமல் வரி இன்னும் அறவிடுகின்றன என்றால் அரசாங்கத்தின் பிழையான கொள்கை தான் காரணம் என்று சொல்ல வேண்டும்.
ReplyDeleteIt is very simple, just implement a law that vehicles registered before 31 Dec 1995 are to be removed from the Sri Lankan roads with the help of RMV and Police dept. (Vintage vehicles should be exempted). Meantime, It should be deregistered and Sri Lanka should help these owners to facilitate reexport these vehicles to countries which are willing to buy i.e African. Must impose severe punishment or fines if any vehicle registered and allowed by authorities. Insurance company should not insure vehicles. By this action Sri Lanka will be a better place to move around in the country with less accidents and less pollution.
ReplyDelete