ஜனாதிபதிக்கு எந்தவொரு கெட்ட வார்தையினாலும், திட்டக்கூடிய பின்னணி உருவாகியுள்ளது - மைத்திரிபால
நாட்டில் வெள்ளை வான் கலாச்சாரம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஹிங்குராக்கொட புதிய பஸ் நிலையத்தை நேற்று அங்குரார்ப்பணம் செய்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்...
தற்போதைய அரசாங்கத்தின் மாற்றங்கள் வயிற்றுக்கும் பொக்கட்டுக்கும் உணரப்படவில்லை என்ற போதிலும், மூளை உள்ளவர்களுக்கு அரசாங்கத்திற் மாற்றம் பற்றி தெரியும்.
இன்று எமது பயணம் பற்றி நாட்டின் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
நாட்டில் இன்று ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு எந்தவொரு கெட்ட வார்தையினாலும் திட்டக்கூடிய பின்னணி உருவாகியுள்ளது.
எந்தவொரு ஒழுக்கமற்ற விடயத்தையும் சமூக ஊடக வலையமைப்பின் ஊடாக கூற நான் சுதந்திரம் வழங்கியுள்ளேன்.
ஜனநாயகம், மக்களின் சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்தை உறுதி செய்துள்ளேன். நீங்கள் என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்புகின்றார்கள்.
2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி மக்கள் என்னிடம் தொழில் வாய்ப்புக்களையோ, உணவு பானங்களையோ, ஆடை அணிகளையோ கேட்கவில்லை.
எனக்கு வாக்களித்த மக்கள் நாட்டில் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டுமாறு கோரியிருந்தனர்.
அச்சம் பயிமின்றி சுதந்திரமாக வாழக்கூடிய பின்னணியை உருவாக்கியுள்ளேன். வெள்ளை வான் கலாச்சாரம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.
ஊடக நிறுவனங்கள் தீ மூட்டப்படுவதனை இல்லாமல் செய்துள்ளேன். ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்லும் கலாச்சாரத்தை இல்லாதொழித்துள்ளேன்.
செய்தி ஆசிரியர்கள் நடு வீதியில் சுட்டுக் கொலை செய்யப்படுவதனை இல்லாமல் செய்துள்ளேன். இந்த அனைத்து மாற்றங்களையும் நான் செய்திருக்கின்றேன்.
இந்த மாற்றம் மக்களின் வயிறுகள் உணரவில்லை, மக்களின் பொக்கட்டுகளுக்கு இது உணரப்படவில்லை.
இந்த மாற்றம் மூளை உள்ள மக்களினால் புரிந்து கொள்ள முடியும். சிலர் இதனைப் புரிந்து கொண்டாலும் புரியாத மாதிரி இருக்கின்றார்கள்.
இந்த நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றத்தை முழு உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், இப்போது இலங்கைக்கு எதிரி நாடுகள் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
Post a Comment