Header Ads



இரக்கமுள்ள முஸ்லிம்கள், இந்துக்களின் வீடாகிய பள்ளிவாசல்..!!


கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் பலர் தங்களது உடமைகளை இழந்தனர்.

மலப்புரம் மாவட்டம், சாலியார் கிராமம் அகம்படத்தில் உள்ள ஜும்ஆ மசூதியில் குழந்தைகள், பெண்கள்,முதியவர்கள் என 17 இந்து குடும்பங்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டு அவர்களுக்கு உணவுகளும் தயாரித்து வழங்கப்பட்டது!

தற்பொழுது கேரள மாநிலம் இயல்பு நிலைக்கு திரும்பும் வேளையில் பள்ளிவாசலில் தங்கியிருந்தவர்களும் வீடு திரும்பினர்!

அனைத்தையும் இழந்த அவர்கள் வீடு திரும்பிச்செல்லும்போது, சமைத்து உண்ண தேவையான அரிசியும் தானியங்களும் பள்ளிவாசலிலிருந்து கொடுத்து அனுப்பினார்கள்.


No comments

Powered by Blogger.