கண்டி மீராமக்காம், பள்ளிவாசல் நூதனசாலையாகிறது
வரலாற்று புகழ்மிக்க கண்டி மீராமக்காம் பள்ளிவாசலுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார நிலைய கட்டிடத்தின் மேல் மாடியில் இஸ்லாமிய நூதனசாலை ஒன்றினையும், வாசிகசாலை ஒன்றினையும் அமைப்பதற்கு பள்ளிவாசல் நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதற்கான பேச்சுவார்த்தைகள் அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் பல்கலைக்கழகப் புத்திஜீவிகளுடன் நடத்தப்பட்டுள்ளதாகப் பள்ளிவாசல் நிர்வாக சபையின் தலைவரும் கண்டி மாநகர சபை பிரதி மேயருமான ரி.எம்.இலாஹி ஆப்தின் தெரிவித்தார்.
கண்டி நகருக்கு விஜயம் செய்யும் பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை கவரும் வகையில் அவர்களுக்கு இஸ்லாமிய கலை, கலாசாரங்களை விபரிக்கும் வகையில் நூதனசாலை அமையும் எனவும் அவர் கூறினார்.
இதற்காக வக்பு சபையின் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்காகவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
-VIdivelli
Post a Comment