மரணமடைந்த மஹிந்தவின், சகோதரன் குறித்து சில தகவல்கள்
பொதுவாக மஹிந்தவின் சகோதரர்கள் என்றாலே பசிஸ் ராஜபக்ஸ, கோத்தபாய ராஜகப்ஸ மற்றும் சமல் ராஜபக்ஸவையே அனைவருக்கும் தெரியும்.
ஆனால் சந்திர ராஜபக்ஸ என்றவுடன், மஹிந்தவுக்கு இப்படி ஒரு சகோதரன் இருக்கின்றாரா என்று அனைவரும் கேள்வி எழுப்புவதை காணக்கூடியதாக உள்ளது.
அந்த வகையில் வெளி உலகுக்கு தன்னை காட்டிக்கொள்ளாத சந்திர ராஜபக்ஸ குறித்து சில தகவல்களை பார்ப்போம்..
D.A. ராஜபக்ஸவுக்கும், டான்டினா திஸாநாயக்க சமரசிங்கவுக்கும் நான்காவது குழந்தையா பிறந்தவரே சந்திர ராஜபக்ஸ.
இவர் புகழ்பெற்ற விவசாயி என அனைவராலும் அறியப்பட்டுள்ளார்.
அகுரஸ்ரா ரம்யா குணசேகர ஹெட்டியாராச்சியின் கணவரும், கௌசல்யா விக்ரமசிங்கவின் மாமனாரும் ஆவார்.
மேலும், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் போத்தபாய ராஜபக்ஸ, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, டட்லி ராஜபக்ஸ, பிரீத்தி ராஜபக்ஸ, காந்தினி ராஜபக்ஸ மற்றும் ஜெயந்தி ராஜபக்ஸ ஆகியோரின் நல்ல சகோதரனாவார்.
கடந்த 6 மாதகாலமாக உடல்நிலை பாதிக்கபட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 70ஆவது வயதின் இன்று காலை உயிரிழந்திருந்தார்.
மேலும், இவரது சடலம் தங்காலை - மெதமுல்ல வீட்டில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment