Header Ads



நாட்டிற்கு வெளியே சென்று, உழ்ஹிய்யாவை நிறைவேற்றும் நிலைமை வருமா..?

-Inaas-

கண்டியிலும், கண்டிக்கு அண்மையில் உள்ள பிரதேச மக்களும் இம்முறை தமது உழ்ஹிய்யாக கடமைகளை கண்டிக்கு வெளியில் நிறைவேற்றுமாறும் உழ்ஹிய்யா இறைச்சிகளை கண்டி பிரதேசத்துக்குள் கொண்டு வர வேண்டாம் எனவும்அகில இலங்கை ஜமியதுல் உலமா கண்டி கிளை 
உத்தியோபூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இப்படியான நிர்ப்பந்தமான சூழ்நிலைகளில்  ஏன் நாம் ஷரீஆவுக்கு உட்பட்ட வகையில்  மாற்றீடுகள் பற்றி சிந்திக்க கூடாது..?

கீழ்வரும் மார்க்கத்தின் ஷரீஆவுக்கு உட்பட்ட மாற்றீட்டை  கண்டி மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது.

அவர்களுக்கு மாட்டை வணங்குவதனை விட முடியாது,  எங்களுக்கு மாட்டை அறுப்பதனை விட முடியாது.  ஏன் இந்த பிடிவாதம்..? நாம் தொடர்ந்தும்  ஒரு சில மத்ஹப்களில் மட்டும் சுருங்கியிருந்தால்,  இதே செய்தி இன்னும் சில ஆண்டுகளில் இப்படி வரும்..

உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்ற விரும்பும்,  இலங்கை முஸ்லிம்கள்  இலங்கைக்கு வெளியே சென்று  தமது உழ்ஹிய்யா கடமைகளை நிறைவேற்றிவிட்டு வரவும்.  இலங்கைக்குள் இறைச்சி கொண்டு வருவதனை தவிர்க்கவும் (அகில இலங்கை ஜமியதுல் உலமா வேண்டுகோள்)

ஆகவே இப்படியான விபரீத நிலை, முழு இலங்கை நாட்டிலும் உருவாக முன்னர்,  நாம் சிறுபான்மையாக வாழ்கிறோம்,  என்பதனை கவனத்தில் கொண்டு ஷரீஆவின் பரந்த விரிந்த தன்மையை   கவனத்தில் கொண்டு இவ்வாறான சூழல்களில் மதிநுட்பத்துடன் செயலாற்ற முன்வருவோம்...

உழ்ஹிய்யாவும் சிறுபான்மை சமூகத்தில் அதன் நடைமுறையும்  என்ற நூலில் இருந்து பெறப்பட்ட
ஒரு பகுதியை சமூகத் தேவை கருதி பகிர்கிறேன்.

இந்தக் கருத்து இஸ்லாத்துக்கு புதிய கருத்து அல்ல,  இங்கு குறிப்பிட்டுள்ள பெரும் இமாம்கள் உட்பட இன்னும் பல இமாம்கள் இந்த நிலைபாட்டிலேயே உள்ளனர்.  அவர்களின் கருத்தையே இங்கு பதிகிறோம்.

இமாம் மாலிக், 
அபூ தெளர்
இமாம் இப்னு ஹஜ்ம்
இமாம் ஷஃபியின்
இமாம் முஹம்மத் இப்னு அஹ்மத் அன்ஸாரி அல் குர்துபி

இப்னு அல் முன்திர் கூறுகிறார்;
பிலால் (ரலி) அவர்களிடமிருந்து நாம் ரிவாயத் செய்கிறோம்: அவர் கூறினார்:
'நான் உழ்ஹிய்யாவாகக் கொடுப்பது 
ஒரு சேவலைத் தவிர வேறெதுவுமல்ல ஆயினும் பொருட்படுத்தமாட்டேன். 
அதனை ஒரு வறுமைப்பட்ட அநாதைக்கு வழங்குவது அதனை உழ்ஹிய்யா கொடுப்பதை விட எனக்கு மிகவும் விருப்பமானது.

சதகா கொடுப்பது சிறந்தது 
என்ற இக் கருத்து இமாம் ஷஃபியின் கருத்தாகும்.
இமாம் மாலிக்
அபூ தெளர் என்போரும் இக் கருத்தைக் கொண்டுள்ளனர்.
இமாம் இப்னு ஹஜ்ம் தனது நூலான முஹல்லாவிலும் பிலால் (ரலி) அவர்களின் இக் கருத்தைக் கொண்டு வருகிறார். 
அத்தோடு அக் கருத்தை ஒட்டிய வகையில் இன்னொரு கருத்து எனக் கூறிவிட்டு கீழ்வருமாறு கூறுகிறார்:
'சாப்பிடத்தக்க அனைத்து பிராணிகளையும் அது நான்கு கால் மிருகமாக இருந்தாலும் பறவையாக இருந்தாலும் உழ்ஹிய்யாக் கொடுக்க முடியும்.'
பிலால் (ரலி) அவர்கள் குறித்த ஏற்கனவே குறிப்பிடப்பட்ட ரிவாயத் முஸன்னப் – அப்துர் ரஜ்ஜாக் என்ற ஹதீஸ் நூலில் வந்துள்ளது. (8156) (385ஃ 4) عبدالرزاق – المصنف)
இந்த ரிவாயத்தில் பிலால் (ரலி) அவர்கள் அதன் பெறுமானத்தை ஸதகா செய்ய முடியும் எனத் தெளிவாகவே சொல்கிறார்கள்.

1. பார்க்க: பத்ஹ் அல் பாரி: பாகம் 10 பக்: 05
2. பார்க்க: இமாம் நவவி – அல் மஜ்மூஉ: வா: 9 பக்: 288 – 294
3. இமாம் குர்துபி: அல் ஜாமிஉ –லி- அஹ்காமில் குர்ஆன். பாகம்: 08 பக் 71 
4. பார்க்க: இமாம் நவவி: கிதாப் அல் – மஜ்மூஃ வா: 09 பக் 338

9 comments:

  1. கண்டியில் மாடு வெட்டுவதற்கு சிங்களவர்கள் தடைவிதிக்கும் போது yes sir yes sir என்று அடங்கி ஒடுங்கி போகிறீர்கள்.

    ஆனால், அண்மையில் வடக்கில் ஒரு சில இந்துக்கள் மாடு வெட்டுவதை எதிர்த்து ஒரு சிறிய போராட்டம் வைத்ததுடன் குய்யோ-முய்யோ என எல்லாரும் துள்ளி குதிர்த்து ஒப்பாரி வைத்தீர்கள்.

    உங்கள் கோரிக்கைகளில் நேர்மை ஒருபோதும் இல்லை என prove பண்ணி விட்டீர்கள்.

    பயம், பதவி, பணம் இந்த 3 “ப” வில் ஒன்று மட்டும் உங்களுக்கு தீருப்தியாக தந்தால் yes sir yes sir போட்டு அடங்கி போய்விடுவீர்கள். நல்ல பிழைப்பு தான்.

    ReplyDelete
  2. நல்ல கருத்து சொன்னீர்கள். நம்மவரில் பலர் பர்ளான கடமைகள் பலவற்றை முழுதாக முழுங்கி விட்டு சுன்னத்தான இக்கடமையில் விடாப்பிடியாக இருப்பாரகள் வீம்புக்காக இருக்குமோ?

    ReplyDelete
  3. எல்லாமே விட்டுக்கொடுப்பு என்று எல்லாமே நாம இழக்க வேண்டியது தான் இனிவரும் காலங்களில்.இலங்கை தனி பவுத்த நாடுளில்லை அனைவருக்கும் சொந்தமான நாடு.அவன் யாரோ ஒரு பைத்தியக்காரன் மாமிசம் alargy என்று உண்ணாமல் விட்டதேதுக்கு மற்றவர்களுக்கு உன்ன வேண்டாம் என்று யாரும் சொல்ல உரிமையில்லை.

    ReplyDelete
  4. Brothers in islam
    Kandy perahara is on going
    There or only Kandy city avoid to cut qurbaan.not kandy district.
    Please we have any question pls call kandy city acju.be calm and behave our self.

    ReplyDelete
  5. கண்டியில் உழ்கியா கொடுக்க வேண்டாமென சிங்களவர்கள் விதிக்கவில்லை, அது அங்குள்ள முஸ்லிம்கள் எடுத்துள்ள முடிவு. அந்தோனி போன்றோர் ஆக்கத்தை சரியாகப் படிக்காவிட்டால், ஊனக்கண் பார்வை அனைத்தையும் குற்றமாகவே மாற்றும்.

    ReplyDelete
  6. முழுமையாக மாடு அறுப்பை விட்டுவிடுங்கள் என்று
    யாரும் இங்கு கூறவில்லை.
    நிர்ப்பந்தமான சூழ்நிலைகளில் உழ்ஹிய்யா என்ற
    வணக்கத்தை விட்டுவிடாமல்
    இப்படி ஹதீஸ் ஆதாரங்களுடன் கூடிய
    மாற்றீடுகளையும் பயன்படுத்தலாம் என்பதே
    இங்கு சொல்ல வரும் கருத்து.
    நபியவர்கள் கொஞ்ச காலம் ரகசியமாக தஃவா செய்தார்கள்
    காரணம் பயம் அல்ல.
    அது போல் தான் இப்படியான ஷரீஆ அனுமதிக்கும் மாற்றீடுகளுக்கு செல்வது
    பயத்தின் காரணத்தால் அல்ல
    எமது இருப்பையும் எமது தஃவாவையும் அடுத்தவர்களுக்கு எத்திவைக்க

    ReplyDelete
  7. We should respect the rules inside the borders of sharia. In Srilanka we have freedom to follow our religion. Will Islamic countries allow Buddhist to build temple in their countries. we have more than 2K masjids and many Islamic institutions inside this small island. So we should be flexible in situations where we can adjust. In this situation we have another option. we can give our qurbani out of kandy.

    ReplyDelete
  8. நாட்டுக்கு வெளியே சென்று கொடுக்க வேண்டிய அளவுக்கு பர்லான கடமையும் அல்ல.

    ReplyDelete
  9. உழ்கிய்யா கொடுக்கும் பணத்தை குடியேற்ற கிராமங்களில் தேவைப்படும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய கொடுத்துதவினால் அந்த உழ்கிய்யாவுக்கான நன்மை கிடைக்கும். இல்லையேல் அது வெறும் மிருக பலியிடல் என்றதான் எடுக்கப்படும்.

    ReplyDelete

Powered by Blogger.