இந்து கோவிலுக்குள், பாடம் கற்பிக்கும் இஸ்லாமியர்கள்
கோவிலுக்குள் பள்ளிகள் இயங்குவது சாதாரண விடயம். ஆனால் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஒரு கோவிலுக்குள் இயங்கும் பள்ளியில், இந்து மதத்தின் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இஸ்லாமிய ஆசிரியர்கள் பாடம் எடுக்கும் சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்ஷியேட்டர் ஹுயுமன் டிவல்ப்மெண்ட் பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தும் இந்தப் பள்ளி கராச்சியின் ‘ரெஹ்மான் காலனி’ என்ற பகுதியில் உள்ள இந்து கோவிலில் இயங்குகிறது. இந்தப் பள்ளியை தொடங்குவதற்கு முன் அப்பகுதி மக்கள் அனைவரிடமும் கருத்து கேட்கப்பட்டு பின்னர் பள்ளியை தொடங்குவதற்கான வேலைகளை தொடங்கியதாக அந்த தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
93 இந்து மாணவர்கள் இந்தக் ‘கோவில் பள்ளியில்’ படித்து வருகின்றனர். இப்பள்ளியில் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் ஆசிரியர்களாக உள்ளனர். இங்கு மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வி மட்டுமே வழங்கப்படுகிறது. அதன் பின்பு இம்மாணவர்கள் நகரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்க அனுப்பப்படுகின்றனர்.
ரெஹ்மான் காலனியில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்துக்களின் குழந்தைகளுக்கு பாடம் எடுப்பதன் மூலம் அங்கு சமூக நல்லிணக்கம் நிலவுகிறது. மேலும் இந்த ‘கோவில் பள்ளி’ அந்த பகுதியில் வாழும் இஸ்லாம் மதத்தினருக்கும், இந்து மக்களுக்கும் இணைப்பு பாலமாக விளங்கி வருகிறது.
இவ்வாறான பள்ளிகளில் முஸ்லிம் மாணவர்களையும் இணைத்துக் கொண்டு, இவர்களோடு சகஜமாகப் பழக வைக்க வேண்டும்.
ReplyDeleteஅப்போது, இவர்கள் மனிதர்கள் என்ற அடிப்படையில் உலகிலுள்ள ஏனையோரோடு தாமும் சமமானவர்கள், என்ற மனோ தைரியத்துடன் சிறு வயது முதலே இயல்பாக வளர்வர்.
மனிதர்களுக்கிடையில் நல்லிணக்கம் வளர, இஸ்லாமிய பெறுமானங்களை முடிந்த இடங்களில் பிரயோகிக்க முயல வேண்டும்.
அறியாமையின் காரணமாக அல்லாஹ்வை திட்டுவதிலிருந்தும் பாதுகாக்கிறார்கள்.
ReplyDeleteEvery place on this earth created by Allah..
ReplyDelete