பிள்ளைகள் குறித்து பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்தினால், போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்த முடியும்
பெற்றோர்கள் பிள்ளைகள் குறித்து அதிக கவனம் செலுத்துவார்களாயின் போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்த முடியும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது நிலவும் சில குறைப்பாடுகளை நிவர்த்தி செய்து கொண்டு அவர்கள் செய்ற்பட்டு இளைஞர் சமுதாயத்தை பாதுகாப்பார்கள் எனத் தாம் கருதுவதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் என்பது எதிர்கால சந்ததியினரை சீரழிக்கும் ஒன்றாகும்.
எனவே, பெற்றோர்கள், பிள்ளைகள் மீது அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
Post a Comment