Header Ads



கண்டியில் குர்பானை நிறைவேற்ற வேண்டாம், இறைச்சியும் கொண்டு வராதீர்கள்

கண்டி நகர் மற்றும் சூழ­வுள்ள பகு­தி­களில் வாழும் முஸ்­லிம்கள் இம்­முறை உழ்­ஹியா கட­மையை கண்டி நகர் பகு­திக்கு வெளியே உள்ள பகு­திக்குச் சென்று நிறை­வேற்றுமாறும் உழ்­ஹியா இறைச்­சியை கண்டி நகர எல்­லைக்குள் எடுத்து வர­வேண்டாம் எனவும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை கண்டி மாவட்ட கிளை வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

கண்டி வரு­டாந்த எசல பெர­ஹரா வைபவம் நேற்று ஆரம்­ப­மாகி எதிர்­வரும் 26 ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளதால் கண்டி நகர எல்­லைக்குள் மிரு­கங்கள் அறுப்­பதும், வெளி­யி­டங்­க­ளி­லி­ருந்து இறைச்சி வகைகள் நக­ருக்குள் கொண்டு வரு­வதும் தடை செய்­யப்­பட்­டுள்­ளது. கண்டி நகர மற்றும் சூழ­வுள்ள முஸ்­லிம்கள் பெரும்­பான்மை இனத்தின் நிகழ்­வான எசல பெர­ஹ­ரா­வுக்கு மதிப்­ப­ளிக்க வேண்­டு­மெ­னவும், தடை செய்­யப்­பட்­டுள்­ள­வற்றை கண்டி நக­ருக்குள் மேற்­கொள்ள வேண்­டா­மெ­னவும் ஏனைய மதத்­த­வர்­களின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­கும்­ப­டியும் கண்டி மாவட்ட ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் உதவித் தலைவர் மௌலவி பஸ்ருல் ரஹ்மான் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

மேலும் அவர் தெரி­வித்­துள்­ள­தா­வது: உழ்­ஹியா கட­மையை நிறை­வேற்றும் முஸ்­லிம்கள் நாட்டின் சட்­டத்­திட்­டங்­க­ளுக்கு அமை­வாக தேவை­யான அனு­ம­திப்­பத்­தி­ரங்­களை உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளி­ட­மி­ருந்து  பெற்­றுக்­கொள்ள வேண்­டு­மெ­னவும் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

வீடுகளிலும், தனிப்பட்ட இடங்களிலும் மாடுகள் அறுக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
-Vidivelli

4 comments:

  1. Should be implemented in Hindu holy areas as well.

    ReplyDelete
  2. warmly welcome to kandy kurubaan people from puttalam...

    ReplyDelete
  3. Anu, we do not care what you eat.. our concern is to make sure that we always what is halal and never eat what is haram....

    ReplyDelete
  4. Anu, we do not care what you eat.. our concern is to make sure that we always eat what is halal and never eat what is haram....

    ReplyDelete

Powered by Blogger.