Header Ads



கிழக்கு மாகாணத்தில் நல்ல அரசியல் நிலமை ஏற்பட வேண்டுமானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அழிக்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை விடுதலைப் புலிகள் உருவாக்கவில்லை, நாங்களே உருவாக்கினோம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றாக இணைந்து நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தன.

இந்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்களின் ஒற்றுமை தொடர்பில் நான் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றேன். அதனை இன்று கிழக்கு மாகாணத்தில் செய்துள்ளார்கள்.

அந்த ஒற்றுமையினை ஏற்படுத்துவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பாத நிலையே இருக்கின்றது. இன்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொக்கட்டுகளில் 40 இலட்சம் ரூபா பணம் இருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை நாங்கள் தான் உருவாக்கினோம். புலிகள் உருவாக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக நான் தான் இருந்தேன்.

அரசியல் தீர்வு தொடர்பில் காலத்தினை இழுத்தடிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே உதவி வருவதுடன் அவர்கள் தமது கோரிக்கையினை சரியாக முன்வைப்பதில்லை.

முடிந்தால் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அரசாங்கத்திற்கு, அரசியல் தீர்வு தொடர்பில் ஒரு காலக்கெடுவை வழங்கட்டும் பார்க்கலாம்.

கிழக்கு மாகாணத்தில் நல்ல அரசியல் நிலமை ஏற்பட வேண்டுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அழிக்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பாதகமான அமைப்பாக மாறியிருக்கின்றதே தவிர அதனால் எந்த பிரயோசனமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. When people become old they will talk nonsense. He is the one who betrayed Tamil people and now talking rubbish.

    ReplyDelete
  2. தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து மட்டுமல்ல சகல தமிழ் அரசியல் காட்சிகளிலும் இருந்து உன்னை போன்று வீட்டில் பேரப்பிள்ளைகளுடன் விளையாடும் வயதில் தேசியம் உரிமை என மக்களை ஏமாற்றுபவர்களை வீட்டிற்கு அனுப்ப தயாராக உள்ளோம்.

    ReplyDelete

Powered by Blogger.