"எமக்கு அமைச்சர்கள் இருக்கு என ஒரு இனமும், புத்த பிக்குகள் இருக்கிறார்கள் என அடுத்த இனமும்"
-வ.ஐ.ச.ஜெயபாலன்
கிழக்குமாகாண தமிழரோ முஸ்லிம்களோ தங்கள் தரப்பை ஒருதலைப்படசமாக எழுதினால் மட்டும் வாசித்து லைக் போடுகிறார்கள். இருதரப்பு நியாயங்களையும் எழுதினால் யாரும் வாசிக்கிறார்கள் இல்லை. கிழக்கில் தமிழரும் முஸ்லிம்களும் இன்னும் இன நல்லிணக்கத்துக்கு தயாராகவில்லை என்பது கவலையாக இருக்கு. இன நல்லிணக்கத்தின் அடிப்படையே இருதரப்பு நியாயங்களையும் செவிமடுத்தல்தான். சுய விமர்சனம் சார்ந்த உறவாடல்தான்.
மீராவோடை பள்ளிக்கூடத்துக்கு பக்கத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் மீண்டும் தங்கள் காணிகளுக்கு குடிவருவதை தடுப்பதாக அந்த மக்கள் சொல்கிறார்கள். இது அநீதியாகும். பிரச்சினையை மட்டக்களப்பு தமிழ் இளைஞர்களும் வாழைச்சேனை மக்களும் விசாரித்து தீர்த்து வைக்கவேண்டும். இது அவர்களது கடமை.
எதிர்கால யுத்தங்களின் தந்தையே நிலத்துக்கான மோதல்கள்தான்.
இதேபோல தங்கள் வாழ்வாதர இரத்தம்போன்ற வயல்பாசன நீரை எழுவான் கரை தமிழ் முஸ்லிம் ஊர்களுக்குக் குடிக்க அள்ளித் தருகிற படுவான் கரைமக்களின் நிலத்தடி நீரையும் உறுஞ்சி நாசமாக்கிற பாதகத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த சிலர் ஈடுபடுகிறார்கள் என அந்த மக்கள் சொல்கிறார்கள். இந்த அநீதியைத் தடுத்து நிறுததுகிற பொறுப்பு எழுவான்கறை மக்களுக்கும் காத்தான்குடி முஸ்லிம் இளஞர்களுக்கு உள்ளது.
எதிர்கால யுத்தங்களின் தாயே தண்ணீருக்கான மோதல்கள்தான்.
முஸ்லிம்களுக்கு தமிழர்களால் அநீதி இழைக்கப்பட்டால் தமிழர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். தமிழர்க்கு முஸ்லிம்களால் அநீதி இழைக்கபட்டால் முஸ்லிம்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். ஒருதலைபட்சமாக பேசுதல் எதிரிகளாக அணிசேரல்தான். இந்த நச்சுவட்டத்தை உடைக்காமல் மாறிவரும் தேசிய சர்வெதேசிய சூழலில் கிழக்கு மக்களுக்கு எதிர்காலமில்லை.
எங்களுக்கு அமைச்சர்கள் இருக்கு என ஒரு இனமும் எங்களுக்கு புத்த பிக்குகள் இருக்கிறார்கள் என அடுத்த இனமும் அதிகதூரம்போக முடியாது.
உண்மையை கூறுகிறீர்கள் ஐயா ...
ReplyDeleteதனது இனம் மட்டும் தான் சிறந்தது, தனது மார்க்கம் மட்டும் தான் பிரபல்லியமானது, தனது குடும்பம் தான் பெரியது,தனது மனைவிதான் சுத்தமானவள், தனது கருத்துத்தான் உண்மையானது என்று.. தான் தான் என சுயநலம் மிதமிஞ்சிய மக்கள் வாழும் உலகில் இவ்வாறு கருத்துச் சொல்லும் என்னைப் போன்ற உங்களைப் போன்றவர்களை ஒரு மாதிரியாகப் பார்க்கின்றார்கள் ஐயா. நீங்கள் சொல்லுவது போன்று நச்சு வட்டமானது மிக மிக விஷாலமானது ஐயா. நச்சு வட்டத்திற்கு வௌியே கொஞ்சப்பேர் இருக்கிறார்கள் பேச முயற்சிக்காத கோழைகளாக இருக்கின்றார்கள். மிகப்பாரிய அழிவொன்றுக்குப் பின்பு, தன் இனம், தன் மதம், தன் குடும்பம், என எல்லாம் அழிவுற்ற பிறகு மீதியானவர்கள் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ முடியாத நிலை தோன்றும் வரை காத்திருக்க வேண்டுமோ ஐயா.
ReplyDelete