கொழும்பில் இப்படியும் நடந்தது
கொழும்பு வாகன நெரிசலை பார்த்து தொழிலே வேண்டாம் என விட்டுச் சென்ற இளைஞன் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
நண்பர்கள் இருவர் இணைந்து கொழும்பில் வேலை தேடிச் சென்றுள்ளனர்.
அதற்கமைய ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையில் வெளியான வேலை வாய்ப்பு விளம்பரங்களை பார்த்து, சாரதி வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
சாரதி தொழில் பரவாயில்லை என எண்ணிய இளைஞர் சாரதி தொழிலுகாக நேர்முகத் தேர்விற்கு சென்றுள்ளார்.
முக்கியஸ்தர் ஒருவருக்கு சாரதியாகும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதற்கமைய மீரிகமவில் இருந்து பம்பலப்பிட்டிக்கு சென்றுள்ளார்.
அதற்கமைய குறித்த முக்கியஸ்தர் புறக்கோட்டைக்கு செல்ல வேண்டும், வாகனத்தை ஓட்டுமாறு கூறியுள்ளார்.
உத்தரவுக்கு அமைய குறித்த இளைஞன் வாகனத்தை செலுத்த ஆரம்பித்துள்ளார். இதன் போது அந்த இளைஞன் உடல் முழுவதும் வியர்வை வடிந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
ஏதேனும் உடல் நிலை சரி இல்லையா என குறித்த முக்கியஸ்தர், சாரதியான இளைஞனிடம் கேட்டுள்ளார்.
இந்த வாகன நெரிசலை பார்க்க பயமாக உள்ளதென கூறிய இளைஞன் தனக்கு தொழிலே வேண்டும் என கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த முக்கியஸ்தர் வேறு வேலை தேடிக் கொள்ளுமாறு வாகனத்தை விட்டு வெளியேற்றியுள்ளார்.
Post a Comment