சரித்திரத்தில் எவருமே, இழைத்திருக்காத தவறு
-தசுன் ராஜபக்ஷ-
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை காணாமற் போகச் செய்தமை தொடர்பான முறைப்பாட்டை ஹோமாகம நீதிமன்றம் 2016 ஜனவரி 26ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது ஹோமாகம மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு சென்ற சந்தியா எக்னெலிகொட விரும்பத்தகாத சம்பவமொன்றுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
அன்று நீதிமன்றத்துக்கு வந்திருந்த பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், வழக்கின் சந்தேக நபர்களான இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் 9 பேரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட மாஜிஸ்திரேட் ரங்க திஸாநாயக்கவை ஏசியதுடன், அவர் பெற்றுக் கொடுத்த விளக்கமறியல் உத்தரவை விமர்சனம் செய்தது நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலாகும்.
அது மாத்திரமல்ல பாதிப்புள்ளானவர்கள் சார்பில் ஆஜராகியிருந்த அரச சட்டத்தரணிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததுடன் அந்த தேரர் நீதிமன்றில் நடந்து கொண்ட விதம் போல் சரித்திரத்திலேயே இந்நாட்டில் யாருமே நடந்து கொள்ளவில்லை.
அத்துடன் நின்றுவிடாமல் ஞானசார தேரர் நீதிமன்றத்தில் இருந்த சந்தியா எக்நெலிகொடவிடமும் சென்று மரண அச்சுறுத்தல் விடுத்தது சட்டத்தை ஒரு பொருட்டாகக் கருதாததால் ஆகும். பதவிதமான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாளைய தினம் பற்றிய பயத்துடன் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த சந்தியா எக்னெலிகொட, தன்னை பயமுறுத்தியது தொடர்பாக ஞானசார தேரருக்கு எதிராக ஹோமாகம பொலிஸில் முறையிட்டார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக ஹோமாகம மாஜிஸ்திரேட் ரங்க திஸாநாயக்கவும் தேரருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் முறைப்பாடொன்றை தாக்கல் செய்தார். உப்பைத் தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டுமென்று சொல்வார்கள். அதேபோல் முதலில் சந்தியா எக்னெலிகொட அளித்த முறைப்பாட்டுக்காக வழக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அவருக்கு எதிரான குற்றங்களுக்கு ஞானசார தேரர் குற்றவாளியென முடிவு செய்த ஹோமாகம மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆறு மாதம் கழிந்து போகக் கூடியவாறு ஒரு வருட சிறைத் தண்டனை விதித்தது. அத்தண்டனைக்கு மேலதிகமாக 3000 ரூபா தண்டப் பணமும் நியமித்த நீதிமன்றம் பாதிப்புக்குள்ளான சந்திகா எக்னெலிகொடவுக்கு 50000 ரூபா நட்டஈடும் வழங்குமாறு ஞானசார தேரருக்கு உத்தரவிட்டது.
ஞானசார தேரர் சிறையில் இருந்த வேளையில் சமூகத்தில் பலவிதமான கதைகள் உருவாகின. எவ்வாறாயினும் அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் ஹோமாகம மாஜிஸ்திரேட் நீதிமன்றில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடொன்றை தாக்கல் செய்து அவருக்கு பிணையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தனர்.
அதன் பின்னர் கடந்த 8ம் திகதி ஹோமாகம மாஜிஸ்திரேட்டும் தற்போதைய கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட்டுமான ரங்க திஸாநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றில் செய்திருந்த முறையீட்டுக்கான தீர்ப்பும் வழங்கப்பட்டது.
அதில் ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்றத்தின் ஆதிபத்தியம் மற்றும் மதிப்புக்கு சவால் விடுத்தமை, அகௌரவம் புரிந்தமை மற்றும் அவமானப்படுத்தியமை, நீதிமன்றத்தில் கலகம் விளைவிக்கும் விதத்தில் நடந்து கொண்டமை, நீதிமன்ற அதிகாரத்திலுள்ளவருக்கு சவால் விடுத்தமை போன்ற நான்கு குற்றங்களுக்கு 6 வருடங்களில் கழிக்கக் கூடியதான 19 வருட கடும் காவல் சிறைத்தண்டனை மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது.
அத்தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பிரீதி பத்மன் சூரசேன , சிரான் குணரத்ன ஆகிய நீதிபதிகள் குழாம் வழங்கியது. குற்றஞ்சாட்டப்பட்ட தேரருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் தாக்கல் செய்த நான்கு குற்றங்களுக்கும் நடத்தப்பட்ட வழக்கு விசாரணையின் போது இரு தரப்பாரும் சாட்சிகளை முன்வைத்திருந்தார்கள். கிரம தேவிந்த, மந்திம் பிடிகல தம்மதின்ன ஆகிய தேரர்கள் இருவும் குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசார தேரர் சார்பில் சாட்சியம் வழங்கினார்கள். அங்கு சாட்சி வழங்கிய தேரர், வெள்ளைக்காரர்களின் சட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என குறிப்பிட்ட தினத்தில் கூறியதாகவும் அது நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கில் அல்லவெனவும் குறிப்பிட்டார்கள். அந்த சாட்சியங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் குறிப்பிட்டது.
அதனால் குற்றஞ்சாட்டப்பட்டவரான தேரர் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்டதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்ததற்கான போதியளவு சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத் தவிர குற்றஞ்சாட்டப்பட்ட தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றங்களும் எவ்வித சந்தேகமுமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன என்பது நீதிமன்றத்தின் எண்ணம் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கிய வேளையில் நீதிமன்றில் ஆஜராகியிருக்கவில்லை. அதனால் தீர்ப்பை 48 மணித்தியாலங்களுக்குள் ஞானசார தேரரிடம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டது.
தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹார த சில்வா இந்த தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்ய எண்ணியுள்ளதால் அதன் தீர்ப்பு வரும் வரை ஞானசார தேரரை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லாமல் சிகிச்சை பெறும் வைத்தியசாலையில் வைத்திருக்குமாறு நீதிபதிகள் குழாமிடம் வேண்டுகோள் விடுத்தார். அவ்வேண்டுகோளை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் வழக்குத் தீர்ப்பு தொடர்பாக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ம் திகதி குறிப்பிட்ட மேன்முறையீட்டை செய்யும்படி கூறியது.
What's the prerequisite for president pardon whe one committed a serious offence disobedience of court of law . A person with robes can get pardon ?
ReplyDeletePeople think past record will be considered . If pardon given it will be bad example safe guard rule of law