முஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி
பஸ் சாரதியொருவர் தனக்கு பாதுகாப்பு தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் பஸ்ஸில் குண்டுத் தாக்குதல் இடம்பெறக்கூடும் எனவும் முகத்திரையினை அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்ததைத் தொடர்ந்து நிகாப் அணிந்திருந்த முஸ்லிம் பெண்ணொருவர் பயங்கரவாதியைப்போல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கண்கள் மாத்திரம் வெளியில் தெரியக்கூடியதும் உடலின் ஏனைய பாகங்கள் மறைக்கப்பட்டதுமான நிகாப் ஆடையினை அணிந்திருந்த பெண்ணொருவர் ஈஸ்டொன்னிலிருந்து பிரிஸ்டொல் நகர மத்திய நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்ற 24 ஆம் இலக்க 'பெஸ்ட் பஸ்' என்ற பஸ் வண்டியில் தனது இரண்டு மாதக் குழந்தையுடன் ஏறிய சற்று நேரத்தில் நிகாப் அணிந்திருந்த பெண்ணை விமர்சிக்கத் தொடங்கினார்.
'இந்த உலகம் ஆபத்தானது' எனத் தெரிவித்த பஸ் சாரதி குறித்த பெண்ணின் முகத்தைப் பார்க்க வேண்டும் என வற்புறுத்தியதாக 20 வயதான அப் பெண் தெரிவித்தார்.
நான் பயங்கரமாக இருப்பதாகவும், அபாயகரமாக இருப்பதாகவும் தெரிவித்த அவர் பயணத்தின்போது தொடர்ந்து பேசிக்கொண்டே வந்ததாகவும், நான் அந்த பஸ் வண்டியை குண்டு வைத்து தகர்க்க வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 'நான் எனது குழந்தையுடன் வந்திருக்கின்றேன், இது எப்படி சாத்தியமாகும் என நான் வினவினேன்' என குறித்த பெண் வினவியதாக ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக என்னை அவமதிக்கும் விதமாக பேசிக்கொண்டிருந்த சாரதி ஒரு கட்டத்தில் என்னை பயங்கரவாதி எனத் தெரிவித்தார். பஸ்ஸில் இருந்தவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர். நான் இந்த ஆடையினை ஏன் அணிந்திருக்கிறேன் எனவும் கேள்வி எழுப்பினார் எனவும் அப் பெண் தெரிவித்தார்.
நான் பொது இடத்தில் அவமானப்படுத்தப்பட்டிருக்கின்றேன். நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். இது 2018, நாம் இவ்வாறு இருக்கக் கூடாது. நான் ஒரு கட்டுப்பாட்டை பின்பற்றி வாழ்கின்ற ஒருவர் எனவும் அப்பெண் குறிப்பிட்டார்.
எவ்வாறெனினும், குறித்த சாரதி மிகப் பெரும் தவறிழைத்துள்ளதாக தெரிவித்துள்ள 'பெஸ்ட் பஸ்' தற்போது மன்னிப்புக் கோரியுள்ளதோடு சாரதி மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எமது சாரதியொருவர் தனது தனிப்பட்ட கருத்தினை வெளியிட்டதன் காரணமாக மனவேதனைக்குள்ளான வாடிக்கையாளரிடம் நாம் முழுமையாகவும் பூரணமாகவும் மன்னிப்புக் கோருகின்றோம் என 'பெஸ்ட் பஸ்' நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
M.I.Abdul Nazar
Kind request!
ReplyDeleteMake a differents between national and international news. Be a responsible media.
சாரதி அவதானமாக இருப்பது அவசியம்தான் உலகம் அப்படித்தான் இருக்கிறது.
ReplyDeleteஅன்நிய ஆண்களின் பார்வையிலிருந்து பாதுகாக்கும் கண்ணியமான ஆடை உலக இன்பங்களுக்கு அடிமையானவர்களுக்கு வெறுப்பாக இருப்பது ஆச்சரியமான விடயமல்ல.
ReplyDeleteThe objective of the driver's behaviour is obvious..he has been misguided..
ReplyDelete