சிங்கள பெளத்தர்களுக்கு இழைக்கப்படும், அநீதிகளை தேடிப் பார்க்க தேசிய தகவல் நிலையம்
இந்நாட்டு சிங்கள பௌத்தர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் சம்பந்தமாக தேடிப் பார்த்து அநீதியிழைக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் தேசிய உரிமைகள் தகவல் மத்திய நிலையம் ஒன்றை ஆரம்பிக்க தேசிய நிறுவனங்கள் பல இணைந்து தீர்மானித்துள்ளன.
இதுகுறித்த முதற்கட்ட கலந்துரையாடல் நடைபெற்றதோடு வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் சிங்கள பௌத்த மக்களுக்கு ஏற்படும் அநீதிகள் தொடர்பான தகவல்களை திரட்டுதல், அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் இலவசமாக சட்டரீதியான பங்கேற்பை மேற்கொள்ளல் போன்றனவே குறித்த தகவல் நிலையத்தை உருவாக்குவதின் நோக்கங்களாகும்.
இதற்காக, எதிர்காலத்தில் விசேட காரியாலயம் ஒன்றை நிறுவி பொதுமக்களுக்கு தகவல்களை வழங்க வாய்பை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்ற தேசிய நிறுவனங்களின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
Post a Comment