முதலையினால் கடியுண்ட, மூதாட்டியின் சடலம் மீட்பு
வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசரோடை ஆற்றிலிருந்து முதலை கடித்த நிலையில் மூதாட்டி ஒருவரின் சடலத்தை வாழைச்சேனைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மயிலந்தன்னை கிராமத்தைச் சேர்ந்த பொன்னன் மாரியாயி (வயது 71) என்பவரின் சடலமே இன்று மீட்கப்பட்டது.
புதன்கிழமை தனது உறவினருக்கு மதிய உணவை ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு பிற்பகல் 1.30 மணியளவில் குளிப்பதற்காக விசரோடை ஆற்றுக்குச் சென்றவர் மாலையாகியும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் வாழைச்சேனைப் பொலிஸில் உறவினர்களினால் மூதாட்டி காணமல் போனது பற்றி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த வாழைச்சேனைப் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவு இன்று சடலத்தை ஆற்றின் மருங்கிலிருந்து மீட்டுள்ளனர்.
இந்த மூதாட்டி குளித்துக் கொண்டிருக்கும்போது அவரைக் கௌவிச் சென்றுள்ள முதலை கிட்டத்தட்ட மூதாட்டியின் உடலின் முக்கால்வாசிப் பங்கை உட்கொண்டிருப்பது சடலத்தைப் பரிசோதனை செய்ததிலிருந்து தெரிய வந்துள்ளது.
இதேவேளை, பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Post a Comment