இறந்த குட்டியை, சுமந்து சென்ற திமிங்கிலம்
மாண்டுபோன குட்டியைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு தாய் திமிங்கிலம் 17 நாட்கள் 1,600 கிலோமீற்றர் தூரம் கடந்திருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் துயரப் பயணத்திற்கு பின்னர் அந்த திமிங்கிலம் கனடாவின் அருகிலுள்ள ஹாரோ நீரிணையில் தனியாக சால்மன் மீன்களைத் துரத்தியவாறு காணப்பட்டுள்ளது.
இந்த வகைத் திமிங்கிலங்கள் பெரும்பாலும் இறந்த குட்டிகளை ஒரு வாரத்திற்குச் சுமந்து திரியும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், குறிப்பிட்ட இந்தத் திமிங்கிலம் புது சாதனை படைத்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
ஜே35 என்று அழைக்கப்படும் அந்தத் திமிங்கிலம் கடந்த சில நாட்களாக உலகின் கவனத்தை ஈர்த்து வந்தது. அது இறந்த குட்டியைப் பிடித்துக்கொண்டு செல்வது முதலில் ஜூலை 24 அன்று கவனிக்கப்பட்டது. அன்றுதான் குட்டி மாண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது.
இப்பொழுது அதன் சடலம் கடலினுள் மூழ்கியிருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Post a Comment