முஸ்லிம்களினால், தமிழர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை நிரூபிக்க முடியுமா..?
முஸ்லிம்கள் தனிப்பட்ட வகையிலோ அல்லது சுயமான போராட்ட இயக்கங்கள் என்ற வகையிலோ தமிழ் பெண்களை மானபங்கப்படுத்தவுமில்லை, தமிழ் மக்களை கும்பலாக கொல்லவுமில்லை. அவை பற்றிய செய்திகள் பொய்யானவை, வதந்திகள் என்பது அந்தந்த ஊர் மக்களுக்கு தெரியும். முஸ்லிம்களை கறுவறுப்பதற்காகவும் தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் கலவரத்தை உண்டாக்குவதற்காகவும் தமிழ் இயக்க கொள்ளையர்களாலும் இராணுவம் சார்ந்தவர்களாலும் இட்டுக்கட்டப்பட்டவையாகும்.
தற்போது இது பற்றி பல சம்பவங்கள் நடந்ததாக இணையத்தளங்களில் எழுதிக்கொண்டிருப்போர் தமது கருத்துக்களுக்கு ஆதாரமாக ஈழ நாதம் போன்ற புலிகளின் பத்திரிகைகளையும், பிரசுரங்களையுமே காட்டுகின்றார்கள். ஆனால் சம்பவ நிகழ்வுகளின் போது அவை பற்றி தமிழ் தேசிய பத்திரிகைகளில் நிச்சயம் செய்திகள் வந்திருக்கும் அவற்றை காட்டுங்கள் என சொன்னால் அவற்றை இவர்களால் காட்ட முடியவில்லை. மாறாக வீரகேசரி போன்ற பத்திரிகைகள் சிங்கள அரசின் ஊது குழல் என சொல்கிறார்கள்.
கலவர காலத்தில் சில தமிழ் தேசிய பத்திரிகைகள் வதந்திகளை செய்திகளாக வெளியிட்ட போது அதனை உடனுக்குடன் முஸ்லிம்கள் மறுத்துள்ளனர்.
முஸ்லிம்கள் கொத்து ரொட்டிக்குள் கர்ப்பத்தடை மருந்து போடுகிறார்கள் என சிங்கள இனவாதிகள் சொன்ன முட்டாள்த்தனமான பொய்களை போன்றதே கிழக்கில் தமிழர்கள் முஸ்லிம்களால் கொல்லப்படுகிறார்கள், கற்பழிக்கப்படுகிறார்கள் என்ற பொய்யாகும். இதனை உண்மை என நம்பியே புலிகள் தம்மோடு வாழ்ந்த வடக்கு முஸ்லிம்களை அனைத்தையும் கொள்ளையடித்துக்கொண்டு வெளியேற்றினர்.
பின்னர் இந்நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்ட விடுதலைப்புலிகள், கிழக்கில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதாக வந்த செய்திகள் காரணமாக வடக்கில் முஸ்லிம்கள் தமிழர்களால் கொல்லப்படலாம் என்பதற்காகவே அவர்களை வெளியேற்றியதாக கூறினர்.
புலிகள் மன்னிப்பு கேட்டதிலிருந்து அவர்கள் வதந்திகளை நம்பி பிழையாக முடிவெடுத்து விட்டதை ஏற்றதனால்த்தான் என்பது தெளிவாகிறது.
உண்மையில் கிழக்கு முஸ்லிம்களால் தமிழ் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு தமிழ் அப்பாவிகள் கொல்லப்பட்டுமிருந்தால் வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம் நியாயமானது என சொல்லி மன்னிப்பு கேட்பதை தவிர்த்திருப்பர்.
கிழக்கில் தமிழ் முஸ்லிம் கலவர காலத்தில் இரு பக்கமும் அடித்துக்கொண்டதும், இடையில் அகப்பட்டவர் கொலையுண்டதும் நடந்த நிகழ்வுகளே தவிர புலிகள் மற்றும் தமிழ் ஆயுத இயக்கங்கள் செய்தது போன்று திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் அல்ல.
நான் கடந்த 15 வருடமாக ஊடகங்கள் மூலம் விடுத்து வரும் சவால்தான் 1980 முதல் 2009 வரை கிழக்கில் முஸ்லிம்கள் தமிழ் கிராமங்கள் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளார்களா என்பதை நிரூபிக்கும்படி. இன்று வரை இது உரிய ஊர் மக்களால் நிரூபிக்கப்படவில்லை.
கிழக்கில் நடந்த அனைத்து விடயங்களும் தம் மீதான தாக்குதலுக்கான மறு பிரதிபலிப்புக்கள்தான். அதில் கூட முஸ்லிம் சமூகம் மிகவும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டது. கலவர காலத்தில் முஸ்லிம்கள் எங்காவது தமிழ் ஊரில் கடத்தப்பட்டால் அதன் எதிரொலியாக சில தமிழ் பயணிகள் முஸ்லிம் இளைஞர்களால் கடத்தப்பட்ட போது ஊரார் தலையிட்டு விடுவித்த சம்பவங்களும் உண்டு.
எத்தனையோ தமிழ் விடுதலை போராளிகளுக்கு முஸ்லிம்கள் அடைக்கலம் கொடுத்துள்ளார்கள் என்பதை நன்றியுள்ளவர்களுக்கு தெரியும்.
முஸ்லிம்கள் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தால் தமக்கும் நன்மை என்பதை புரிந்தே இருந்தார்கள். இதன் காரணமாக சிலர் புலிகள் போன்ற இயக்கங்களிலும் இணைந்திருந்தனர். முஸ்லிம்களுக்கெதிராக நடந்தும் புலிகளுடன் இணைந்திருந்த முஸ்லிம்களின் குடும்பத்தினரை கூட முஸ்லிம்கள் வெறுக்கவில்லை. கடந்த கல்முனை மாநகர சபை தேர்தலின் போது இவ்வாறு விடுதலைபுலிகளுடன் இணைந்து போராடி மாவீரரான முஸ்லிம் ஒருவரின் மகனை கல்முனைக்குடி முஸ்லிம் மக்கள் வாக்களித்து உறுப்பினராக்கியுள்ளதன் மூலம் முஸ்லிம்கள் பலரை கொன்ற புலிகளின் மாவீரர் குடும்பத்தையும் கவுரவித்துள்ளார்கள். அதே வேளை புலிகளை எதிர்த்து நின்று ஷஹீதானவர்களின் குடும்பங்களை கல்முனை முஸ்லிம்கள் அரசியலில் ஒதுக்கியே வந்துள்ளனர்.
இவற்றின் மூலம் தமிழர் போராட்டத்தை முஸ்லிம்கள் கொச்சைப்படுத்தவில்லை மாறாக கவுரவிக்கிறார்கள் என்பதை புரியலாம்.
ஆகவே புலம் பெயர் தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் முஸ்லிம் தமிழ் முறுகலை ஏற்படுத்தும் வகையில் பொய்களையும் கேள்விப்பட்டவற்றையும் இணையத்தளங்களில் எழுதிக்கொண்டிராமல் எதிர்கால தமிழ் முஸ்லிம் உறவுகளை எவ்வாறு கட்டியெழுப்பலாம் என்பதற்கான ஆக்கபூர்வனான கருத்துக்களை முன் வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
- முபாறக் அப்துல் மஜீத்
உலமா கட்சித்தலைவர்.
We are very peaceful people when comparing with others in Sri Lanka but we have been subjected to numerous atrocities by others.
ReplyDeleteNoone will contradict with author.Muslims living among Tamil brothers and Tamils must realise we as minority community at receiving end . We must build up unity with us forgetting petty differences. We have lived decades peacefully. Our politicians created differences ordinary men don't have any
ReplyDeletePolitical leadership from both community should encourage and work our for unity and its essential to live peacefully Tamils Muslims
Don't forget Muslims living among majority community have different problems its becoming worst because of same leaders who act for their own end coexistence prevailed so far
deviating they are facing new problems
தலைவரின் கருத்தில் உண்மையும் இருக்கின்றது. உங்களின் பிரதேசத்தில் உள்ள வீரமுனைச் சம்பவத்தையும் விசாரித்துப்பாருங்ள்.
ReplyDelete