Header Ads



பிரபாகரனின் உடலை கண்டெடுத்ததும், பொன்சேக்கா என்ன செய்தார் தெரியுமா..?

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலத்தில் இருந்து, புலிகளின் சீருடையை அகற்றுமாறு, சிறிலங்கா இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே உத்தரவிட்டார் என்று மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்டப் போரில் சிறிலங்கா இராணுவ அணிகளை வழிநடத்திய தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே சிறிலங்கா இராணுவத்தில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்றுள்ளார்.

இவர் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

”2009 மே 19ஆம் நாள், கடுமையான துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர், பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

பிரபாகரனின் உடல் புலிகளின் சீருடையில் இருக்கும் முதலாவது ஒளிப்படம் பகிரங்கப்படுத்தப்பட்டது.

அதற்கு சரத் பொன்சேகா மூத்த இராணுவ அதிகாரிகளைத் திட்டி, சீருடையை அகற்றச் சொன்னார்.

சரத் பொன்சேகா கோபமாக இருந்தார். பிரபாகரனின் உடலில், அரைத் துணியைப் போடுமாறு உத்தரவிட்டார்.

அதன் பின்னர், இராணுவ முகாம் ஒன்றுக்கு பிரபாகரனின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, இடுப்பில் அரைத்துணி அணியப்பட்டு, மீண்டும் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கே கொண்டு வரப்பட்டது.

பிரபாகரனின் உடலை கருணாவும், தயா மாஸ்டரும்  அடையாளம் காட்டிய போது,  இடுப்பில் மாத்திரம் துணி போர்த்தப்பட்டிருந்தது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. நல்ல நாடகங்களும் நிலாச்சோறு ஊட்டிய பாட்டியின் கதையும் இது.

    ReplyDelete
  2. அனைத்து மக்களினதும் சாபம், கேவலமான மரணம்

    ReplyDelete

Powered by Blogger.