பாலஸ்தீன மக்களையும், அரசையும் மிரட்டமுடியாது - அமெரிக்காவுக்கு பதிலடி
பாலஸ்தீனத்துக்கு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்த 200 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியுதவி நிறுத்தப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இஸ்ரேல் தலைநகராக ஜெரூசலத்தை அமெரிக்கா அங்கீகரித்ததை தொடர்ந்து வெள்ளை மாளிகையுடனான உறவை பாலஸ்தீனம் முறித்துக்கொண்டது. இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் பாலஸ்தீனத்திற்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி நிறுத்தப்படுவதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் நிகழாண்டு பட்ஜெட்டில், பாலஸ்தீனத்தின் வெஸ்ட் பேங் மற்றும் காசா நகரங்களின் நிர்வாகம், சுகாதாரம், கல்வி போன்றவற்றை மேம்படுத்த 251 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்து.
அப்பகுதிகளில் ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்கம் அதிகம் இருப்பதால் பாலஸ்தீனத்துக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 200 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஏற்கனவே மனித உரிமைகள் மற்றும் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியில், பொதுமக்களின் உயிர்களுக்கும் பயங்கரவாதிகள் ஆபத்தை விளைவித்து வருவதால் அங்கு மிகவும் மோசமான சூழல் நிலவிவருகிறது. இதனால், இப்பகுதியில் தேவையான உதவிகளை செய்வதில் சர்வதேச நாடுகளுக்கு பெரும் சவாலாக விளங்குகிறது என அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பாலத்தீனத்திற்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட நிதி வேறு திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால்,
இந்நிலையில், அமெரிக்காவின் இந்த முடிவை ‘அரசியல் ரீதியிலான மலிவான அச்சுருத்தல்’ என குறிப்பிட்டுள்ள பாலஸ்தீனம், இது போன்ற நடவடிக்கைகளால் பாலஸ்தீன மக்களையும், அரசையும் மிரட்டமுடியாது. பாலஸ்தீன மக்களின் உரிமை விற்பனைக்கானது அல்ல என அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. #
தனது மண்ணின் உரிமைக்காக போராடும் ஹமாஸ் இயக்கத்தை தீவிரவாதம் என்று ஒருபோதும் சொல்ல வேண்டாம்
ReplyDeleteபலஸ்தீன மக்களின் மனவுறுதிக்கும் தைரியத்திற்கும் நிச்சயம் நற்பெறுபேறு கிடைத்தே தீரும்
ReplyDelete