Header Ads



பேஸ்­புக்கில் எழுதியபடி நடந்த மரணம் - திடீர் மரணத்தில் இருந்து, இறைவா எங்களை பாதுகாப்பாயாக...

-M.Suhail-

இறு­தி­நேர கஷ்­டங்­களை தவிர்த்­துக்­கொள்ள பெரு­நா­ளைக்கு 5 நாட்­க­ளுக்கு முன்­னரே மனை­வி­யையும் மக­னையும் ஊருக்கு அழைத்­துச்­சென்று அங்கு விட்­டு­விட்டு மீண்டும் கொழும்­புக்கு திரும்­பி­விட்டேன். ஏனெனில், செவ்­வா­யன்றும் அலு­வ­லக வேலைகள் இருப்­பதால் அன்று அரைநாள் விடுப்பு கிடைக்­கா­விடின் பெருநாள் தினத்­தன்று அதி­கா­லையே ஊருக்கு செல்­ல ­வேண்­டிய நிலை தோன்றும் என்­ப­தற்­கான முன்­னேற்­பாடே. இருந்­தாலும் அலு­வ­லக வேலை­களை பகிர்ந்­து­கொண்டு கடந்த செவ்­வா­யன்று மதியம் தெல்­தோட்டை நோக்கி புறப்­பட்டு மீண்டும் கடந்த சனி­யன்று இரவு கொழும்­புக்கு திரும்­பு­கை­யி­லேயே அந்த சம்­பவம் நடந்­தது.

நானாவும் அவ­ரது குடும்பம் மற்றும் எனது மனைவி, பிள்ளை மாவ­னெல்­லையில் இறங்க நானும் சகோ­த­ரியின் குடும்­பத்­தி­ன­ரு­மாக பயணம் தொடர்­கி­றது. தமிழ் சகோதர் ஒரு­வரின் வாக­னத்தில் வந்­து­கொண்­டி­ருக்­கிறோம். கொழும்பை அடைய இன்னும் ஒரு மணித்­தி­யா­லம்தான் இருக்கும். வீதி நெரி­சல்­க­ளின்றி சீராக இருக்க நமது வாக­னமும் ஓர­ளவு வேகத்தில் பய­ணிக்­கி­றது. பஸ்­யாலை நாற்­சந்தி அண்­மிக்க 150 மீற்றர் இருக்­கையில் கொஞ்சம் வாகன நெரிசல் இருந்­தது. வேகத்தை கட்­டுப்­ப­டுத்த முடி­யாது முன்னே இருந்த புதி­ய­தொரு காரின் மீது மோதுண்டு கடும் சத்­தத்­துடன் எமது வேன் நின்­றது.

முன் ஆச­னத்தில் அமர்ந்­தி­ருந்த எனக்கு கொஞ்சம் அதிர்ச்சி. பின்னே உள்ள சகோ­த­ரியின் பிள்­ளைகள் மீதே எனது கவனம் திரும்­பி­யது. இறை­வனின் அருளால் எந்தப் பாதிப்­பு­களும் இல்லை. மோதப்­பட்ட காரி­லி­ருந்து வேக­மாக இரு இளை­ஞர்கள் எமது வேனை நோக்கி வந்­தனர். கடும் கோபத்­துடன் வரு­வது போன்று தெரிந்­தாலும், கார் ஓட்­டு­ந­ரான அந்த இந்­தியர், வாக­னத்தில் உள்­ள­வர்­க­ளுக்கு ஏதா­வது நேர்ந்­ததா என்றே முதலில் கேட்டார். தமது புதிய வாக­னத்­திற்கு பாதிப்பு ஏற்­பட்­டி­ருந்த நிலையில் அவர் அடுத்­த­வரின் நலன் குறித்து விசா­ரித்­ததில் மனம் பூரிப்­ப­டைந்­தது. விபத்தில் இரு வாக­னங்­க­ளுக்கும் சேதம் ஏற்­பட்­டதே தவிர வேறு எந்த தேதங்­களும் ஏற்­ப­ட­வில்லை. அல்­லாஹ்­விற்கு நன்றி தெரி­வித்­த­வர்­க­ளாக ஒரு மணி நேரத்தை அவ்­வி­டத்­தி­லேயே செல­விட்டு வேறொரு வேனில் பய­ணத்தை தொடர்ந்தோம்.

கடந்த செவ்வாய் முதல் வீதிப் பய­ணங்கள் அதி­க­ரித்­தி­ருந்­தன. பிர­தான காரணம் முஸ்­லிம்­களில் ஹஜ்ஜுப் பெரு­நாளும் சிங்­கள மக்­களின் பாரம்­ப­ரிய கொண்­டாட்­ட­மான கண்டி பெர­ஹெ­ர­வும்தான். இது­த­விர போயா தினம் மற்றும் விடு­மு­றை­க­ளையும் நாட்டு மக்கள் கழித்­துக்­கொண்­டி­ருந்­தனர்.

எமக்கு நேர்ந்தது ஒரு சாதா­ரண விபத்து. சார­தியின் கவ­னக்­கு­றைவா? அல்­லது வேகத்தை கட்­டுப்­ப­டுத்த 'பிறேக்' ஒத்­து­ழைக்­க­வி­லையா? என்ற விசா­ரணை இடம்­பெ­று­கி­றது. இது பாரிய அசம்­பா­வி­த­மாக பதி­வாகவில்லை. எனினும், குறித்த காலப்­ப­கு­தியில் நாட்டின் பல்­வேறு பிர­தே­சங்­க­ளிலும் பார­தூ­ர­மான விபத்­துக்­களால் பல உயி­ரி­ழப்­பு­களும் சோக சம்­ப­வங்­களும் நேர்ந்­துள்­ளன. குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் பலர் மரணித்துள்ளனர். விடு­முறை நாட்­களில் வீதி விபத்­துக்கள் மற்றும் நீரில் மூழ்கி மர­ணித்தல் என்­பது ஊட­கங்­களில் பிர­தான செய்­தி­க­ளாக ஆக்­கி­ர­மிக்­கின்­றன. இவற்றை அறிக்­கை­யி­டும்­போது சில நிமி­டங்கள் ஆசி­ரியர் பீடத்தில் நமது கண்கள் கலங்கி இத­யமும் கனக்­கி­றது.

மின்­னேரி சம்­பவம்

மிகவும் பார­தூ­ர­மான சம்­ப­வ­மாக நாம் கடந்த ஞாயி­றன்று அதி­காலை மின்­னே­ரியில் இடம்பெற் வீதி விபத்துச் சம்­ப­வத்தை குறிப்­பி­டலாம்.

சம வய­து­டைய ஆறு நண்­பர்கள் ஹஜ் பெருநாள் கொண்­டாட்­டத்­தை­யொட்டி கடந்த வெள்­ளி­யன்று அதி­காலை நுவ­ரெ­லி­யா­வுக்கு சுற்­றுலா சென்­றுள்­ளனர். வெள்ளி மற்றும் சனிக்­கி­ழமை அங்கு இருந்­து­விட்டு சனிக்­கி­ழமை இரவு சொந்த ஊரான கது­ரு­வெல முஸ்லிம் கொல­னிக்கு திரும்­பி­யுள்­ளனர். இம்ஸித் என்ற இளைஞன் ஆரம்­பத்தில் வாக­னத்தை ஓட்டி வந்­துள்­ள­போ­திலும் தம்­புள்­ளையில் தேனீர் அருந்­தி­விட்டு 'எனக்கு தூக்கம் வரு­கி­றது' என்று கூறி­விட்டு பின் ஆச­னத்தில் போய் உறங்­கி­விட்டார். சாரதி ஆச­னத்­துக்கு அரு­கி­லி­ருந்த முன் ஆச­னத்தில் இன்சாப் அமர்ந்து பய­ணித்­தார். கது­ரு­வெ­லக்கு சுமார் அரை மணி நேர தூரம் இருக்கும். மின்­னேரி பகு­தியில் வீதியை விட்டு வில­கிய வேன் மரத்தில் மோதி விபத்­துக்­குள்­ளா­கி­யது.

இந்த விபத்தில் கது­ரு­வெல, முஸ்லிம் கொல­னியைச் சேர்ந்த காமில் இன்ஷாப் (வயது 23) மற்றும் முஸ்­தபா  இம்ஷித் (வயது 23) ஆகிய இளை­ஞர்­களே உயி­ரி­ழந்­துள்­ளனர். மேலும் இவ்­வி­பத்­தின்­போது வேனில் பய­ணித்த 6 பேரில்  இருவர் மர­ணித்த நிலையில் 3 பேர் காயங்­க­ளுக்­குள்­ளாகி பொலன்­ன­றுவை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் ஒரு­வ­ருக்கு முதுகில் முறி­வேற்­பட்­டுள்­ளது. இது­த­விர வாக­னத்தை செலுத்­தி­வந்­தவர் கைது­செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

இந்த சம்­பவம் கது­ரு­வெல முஸ்லிம் கொல­னியை பெரும் சோகத்தில் ஆழ்த்­தி­யி­ருந்­தது.

இந்த சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்த இம்ஸித் இரு வாரங்­க­ளுக்கு முன்னர் தனது முகப்­புத்­த­கத்தில் ''யா அல்லாஹ், எங்­களை திடீர் மர­ணத்­தி­லி­ருந்து பாது­காப்­பா­யாக' என பதி­விட்­டி­ருந்தார். இது­த­விர கடந்த 15 ஆம் திகதி இன்­ஷாபின் பிறந்த தினத்­திற்கு இம்ஷித், 'நானும் அவனும்' என்ற தலைப்பில் இப்­படி வாழ்த்துக் கவி­யொன்றை பதி­விட்­டி­ருக்­கிறார். ''கண் திறந்த நாள் முதல் மண்­மூடும் நாள் வரை என்றும் நிறம் மாறா நண்­பனாய் என்­னுடன் என் நிழல் Happy Birthday” என பதி­விட்­டி­ருந்தார். அப்­ப­டியே மண்­மூடும் நாள் வரை இரு­வரும் ஒன்­றா­கவே இருந்­துள்­ளனர். இதற்­கப்பால் ஒரே கப்ரில் இரு நண்­பர்­க­ளது ஜனா­ஸாக்­களும் அடக்கம் செய்­யப்­பட்­டன.

செம்­மண்­ணோ­டை விபத்து

10 ஆம் வகுப்­புடன் பாட­சாலை கல்­விக்கு முற்­றுப்­புள்ளி வைத்­தவர் அஸீம். குடும்பக் கஷ்டம் படிப்பை நிறுத்­தி­விட்டு கொழும்பில் வேலை செய்ய நிர்ப்­பந்­தித்­தி­ருக்­கி­றது. ஹஜ்­ஜுப்­பெ­ருநாள் விடு­மு­றையில் சொந்த ஊரான வாழைச்­சேனை, செம்­மண்­ணோ­டைக்கு சென்ற அவர் கடந்த சனிக்­கி­ழமை மதி­ய ­வே­ளையில் தனது நண்­பர்கள் சகிதம் பாசிக்­குடா கட­லுக்கு நீராடச் சென்­றி­ருக்­கிறார். நீண்­ட­நேரம் பாசிக்­குடா கடலில் நேரத்தை செல­விட்ட பின்னர் 5 மணி கடந்து வீடு திரும்பத் தீர்­மா­னித்­தி­ருக்­கின்­றனர். அப்­போது ஏனைய நண்­பர்கள் முச்­சக்­கர வண்­டி­யிலும் மோட்டார் சைக்­கி­ளிலும் முன்னே செல்ல தனது நண்­பரான நிப்­ரா­ஸிடம் மோட்டார் சைக்­கிளை தான் செலுத்­தப்­போ­வ­தாக கேட்­டி­ருக்­கிறார் அஸீம். பிடி­வா­த­மாகக் கேட்க, நிப்ராஸ் மோட்டார் சைக்­கிளை கொடுக்க இவர் வேறு வீதி ஊடாக வீடு­வர எத்­த­னித்­தி­ருக்­கிறார். இதன்­போது பாசிக்­குடா மாலு மாலு ஹோட்டல் பகு­தியை அண­மித்­த­போது மோட்டார் சைக்கிள் வேகக்­கட்­டுப்­பாட்டை இழந்து விபத்­துக்­குள்­ளா­கி­யது. இதன்­போது அஹ­மது லெப்பை மொஹம்மட் அஸீம் ஸ்தலத்­தி­லேயே பலி­யா­ன­தோடு நிப்ராஸ் படு­கா­ய­ம­டைந்­துள்ளார்.

தாய் முன் மகன் பலி

கிண்­ணியா, மதீனா நகரில் சாதா­ரண குடும்­பத்தில் வசிக்கும் 9 வய­தான முகம்­மது றிஸாத் குடும்­பத்தில் இரண்­டா­வது பிள்ளை. வீட்டில் எந்­நே­ரமும் சுறு­சு­றுப்­பாக இயங்­கக்­கூ­டிய பிள்ளை. அல் இக்ராஹ் வித்­தி­யா­ல­யத்தில் 4 ஆம் தரத்தில் படித்­துக்­கொண்­டி­ருந்தார்.

அன்று ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை வீட்டில் அலுப்புத் தட்­டி­யதால் பிள்­ளைகள், ஏதா­வது கொறித்­துக்­கொள்ள வேண்டும் என கேட்க தாய், மகனை கடைக்கு அனுப்பி ஏதா­வது சிற்­றுண்டி வாங்கிக் கொடுக்க முயற்­சித்­தி­ருக்­கிறார். கிண்­ணியா மதீனா நகர் பகு­தியில் கிண்­ணியா - மட்­டக்­க­ளப்பு வீதிக்­க­ருகே வீட்­டுக்கு மறு­பக்­கத்தில் ஒரு சிற்­றுண்டிக் கடைக்கு மகனை அனுப்பி வீதி­யோ­ரத்­தி­லி­ருந்து தாய் பார்த்­துக்­கொண்­டி­ருக்­கிறார். பாத­சாரி கட­வையில் மகன் செல்­கிறார்.

வீதியில் மூதூ­ரி­லி­ருந்து கிண்­ணியா நோக்கி வேக­மாக வந்த மோட்டார் சைக்கிள், முகம்­மது றிஸாத் மீது மோதி­யதில் அவ்­வி­டத்­தி­லேயே பலி­யா­கிறார். இந்த சம்­பவம் கிண்­ணி­யாவை மிகவும் சோகத்தில் ஆழ்த்­தி­யது.

விடு­முறை காலங்­களில் அதி­க­மாக கடல் மற்றும் நீரே­ரிகள் என்­ப­வற்றை பார்­வை­யிட சுற்­றுலா செல்­கின்றோம்.  இவ்­வா­றா­ன­தொரு சந்­தர்ப்­பத்தில் நீர் நிலை­களில் நாம் குளிப்­ப­தற்கு ஆசைப்­பட்டு விப­ரீ­தங்கள் ஏற்­ப­டு­கின்­றன. இந்த ஹஜ் விடு­முறை காலத்­திலும் இப்­ப­டி­யான சம்­ப­வங்கள் பல பதி­வா­கி­யி­ருந்­தன. அரபுக் கல்­லூரி மாண­வர்கள்

இன்னும் ஆறு மாதங்­களில் மௌலவி பட்டம் பெறக் காத்­தி­ருக்கும் மாண­வர்கள் அவர்கள். ஏறாவூர் பாக்­கி­யதுஸ் ஸாலிஹாத் மத்­ர­ஸாவில் கல்­வியை தொடர்ந்த ஏறா­வூரை சேர்ந்த 5 மாண­வர்கள் ஹஜ் விடு­முறை சுற்­றுலா செல்ல ஆசைப்­பட்டு ஜெயந்­தி­யாய பகு­தி­யி­லுள்ள நண்­பர்­களை சந்­திக்கப் போயுள்­ளனர். அங்கு சென்ற அவர்கள் அப்­ப­கு­தி­யி­லுள்ள குளத்தை பார்­வை­யிடச் சென்­றி­ருக்­கின்­றனர். அங்கு மீன்­பிடிப் பட­குகள் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­தன. இதி­லொன்றில் ஏறிய நான்கு மெள­லவி மாண­வர்கள் குளத்தில் சவாரி செய்­த­போது படகு கவிழ்ந்து நீரில் மூழ்­கி­யுள்­ளது.

நீரில் மூழ்­கிய பட­கி­லி­ருந்த ஒரு­வ­ருக்கு மட்டும் நீந்தத் தெரியும் ஏனை­யோ­ருக்கு நீச்சல் தெரி­யாது. இந்­நி­லையில் ஒருவர் மரக்­கட்­டை­யொன்றைப் பற்றிப் பிடித்­து­கொண்டு கூக்­கு­ர­லிட்­டுள்ளார். நீச்சல் தெரி­யாத ஒருவர் நீரில் மூழ்­கி­ய­போது அவரை காப்­பாற்ற முயன்ற மற்­ற­வரும் நீரில் மூழ்­கி­யுள்ளார்.

அவ்­வே­ளையில் அக்கம் பக்­க­த்தி­லுள்­ள­வர்கள் ஓடோடிச் சென்று நீரில் மூழ்­கி­ய­வர்­களை மீட்­டெ­டுத்­த­போதும் அவர்­களில் ஏறாவூர் மீரா­கேணி ஸக்காத் கிரா­மத்தில் வசிக்கும் முகம்­மது அனஸ் முகம்­மது சாக்கிர் (வயது 24), ஏறாவூர் ஆர்.டீ.எஸ்.வீதி மிச் நகரைச் சேர்ந்த முகம்­மது உசனார் முகம்மட் சாதிக் (வயது 21) ஆகியோர் நீரில் மூழ்கி உயி­ரி­ழந்­துள்­ளனர்.  வீ.ரீ.இஸ்ஸத் (வயது 23) எனும் மாணவர் மீட்­கப்­பட்டு ஆபத்­தான நிலையில் வாழைச்­சேனை ஆதார வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்டார்.

துடிப்­பான இளைஞன் ரஷாட் பதுளை, திரி­கம கிரா­மத்தை சேர்ந்­தவர். வீட்­டுக்கு ஒற்­றைப்­பிள்ளை. சமூகப் பணியில் மும்­மு­ர­மாக செயற்­ப­டக்­கூ­டி­யவர். முச்­சக்­கர வண்டி ஓட்­டு­ந­ராக இருந்த அவர் ஒரு வாரத்­திற்கு முன்னர் கொழும்பில் தனியார் நிறு­வ­ன­மொன்றால் சார­தி­யாக வேலை­வாய்ப்பை பெற்றார். 

18 வயது மொஹமட் ரஷாடின் குடும்­பத்­தினர் 27 பேர் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்­திற்கு மறுநாள் வியா­ழக்­கி­ழமை ஹம்­பாந்­தோட்டை கிரிந்த கடற்­ப­கு­திக்கு சுற்­றுலா சென்­றி­ருக்­கின்­றனர்.

கடலில் நீரா­டி­விட்டு திரும்­பு­கையில் புதிய தம்­ப­தி­க­ளான ரஷாதின்  மாமாவும் மாமியும் கடல் அலையில் அள்­ளுண்டு செல்­வதை அவ­தா­னித்த ரஷாத் உடனே சென்று அவர்­களை காப்­பாற்ற முயற்சி செய்­துள்ளார். ஒரு­வ­ழி­யாக மாமா­வையும் மாமி­யையும் காப்­பாற்­றி­விட்டு கரையை அடைய முயற்­சிக்­கையில் ரஷாடை மற்­று­மொரு அலை கட­லுக்கு இழுத்துச் சென்­றுள்­ளது.

அவரை காப்­பாற்ற கடற்­ப­டை­யினர், பொது­மக்கள், பொலிஸார் என பலரும் முயற்­சித்­தனர். அரை மணி நேரத்தின் பின்னர் ஒரு பாறைக்­கி­டையில் அவ­ரது உடல் சிக்­குண்­டி­ருந்த நிலையில் மீட்­கப்­பட்டார். அவ­ரது ஜனாஸா பது­ளைக்கு எடுத்­துச்­செல்­லப்­பட்டு அடக்கம் செய்­யப்­பட்­டது.

வீதி விபத்­துக்­களும் நீர் நிலை­களில் மூழ்கி ஏற்­படும் உயி­ரி­ழப்­பு­களும் கவ­ன­யீனம் கார­ண­மா­கவே அதிகம் இடம்­பெ­று­கின்­றன. குறிப்­பாக இள­வ­ய­தினர் இவ்­வாறு திடீர் மர­ண­மா­வது அதி­க­ரித்து செல்­கின்­றது.

வாக­னங்கள் செலுத்­தும்­போது மிகக் கவ­ன­மாக செயற்­பட வேண்டும் என்­ப­தற்­கா­கவும் வீதி விபத்­துக்­களை குறைப்­ப­தற்­கா­க­வுமே அர­சாங்கம் தண்­டப்­ப­ணத்தை பன்­ம­டங்கு அதி­க­ரித்­தது. எனினும் எமது சமூ­கத்தில் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத திடீர் மர­ணங்கள் அதி­க­ரித்­த­வண்­ணமே இருக்­கின்­றன.

குறிப்­பாக, விடு­முறைக் காலத்தை கண்­மூ­டித்­த­ன­மாக குதூ­க­ல­மாக கழிக்­கவே இளை­ஞர்கள் எத்­த­னிக்­கின்­றனர். இது தவ­றாகும். எதற்கும் ஒரு வரை­யறை இருக்­கி­றது.

வீதியில் வாக­னத்தை செலுத்­தும்­போது வீதி ஒழுங்குகளை பேணுமிடத்து வாகனத்தை ஓரிடத்தில் நிறுத்தி நன்றாக தூங்கிவிட்டுப் பின்னர் பயணத்தை தெடரலாம். எல்லாவற்றிற்கும் பொறுமை மிக அவசியம். பெரும்பாலான சாரதிகள் பொறுமை இழந்தவாறே வாகனத்தை செலுத்துகின்றனர். அவர்களுக்கு தனது பயண நேரத்தை சுருக்கிக்கொள்வது இலக்காக இருக்கின்றதே தவிர வாகனத்தில் இருப்போர் மற்றும் பாதசாரிகள் குறித்து கவலைப்படுவதில்லை. இந்நிலைமை மாறவேண்டும்.

நாம் வீதியில் வாகனத்தை செலுத்தும்போது உயிர்கள் விலைமதிக்க முடியாதவை என்ற சிந்தனை நமக்குள் ஏற்பட வேண்டும்.

இதுதவிர, தற்போது அதிகம் ஏற்படும் நீர் நிலைகளில் மூழ்கி மரணித்தல் என்பது அங்கு செல்பவர்களின் கவனயீனமே காரணம் எனலாம். ஏனெனில் தெரியாத இடங்களுக்கு செல்லும்போது அங்குள்ளவர்களின் ஆலோசனைகளின்றி நீராடச் செல்வது, சிலபோது எச்சரிக்கைகளை மீறி குளிக்க முற்படுவது மற்றும் மற்றவர்களை வியக்கவைக்க வேண்டும் என்பதற்காக வித்தைகள் காட்ட முற்படுவதாலும் இவ்வாறான அனர்த்தங்களை எதிர்கொள்ள வேண்டியேற்படுகின்றது.

உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்திருக்கிறது. இத்தறுவாயில் நண்பர்கள் இணைந்து சுற்றுலா செல்வர். இதுதவிர, தப்லீக் ஜமாஅத் அல்லது வேறு நிகழ்வுகளுக்காக இளைஞர்கள் வெளிப்பிரதேசங்களுக்கு செல்வர். இவர்கள்குறித்து பொறுப்பாளர்கள் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும் என்பதையும் இந்த இடத்தில் நினைவுபடுத்த விரும்புகிறோம். ஏனெனில், கடந்த காலங்களில் தப்லீக் ஜமாஅத்தில் வெளி பிரதேசங்களுக்கு சென்று கடல், ஆறு, குளங்களில் நீராடப் போய்  பல உயிரிழப்புகளை சந்தித்திருக்கிறோம். இதன்பிறகும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருக்க அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

நமது சுற்றுலா பயணங்களை திட்டமிட்டதாக அமைத்துக்கொள்வது மற்றும் சரியான வழிகாட்டல்களுடன் செல்வது இன்றியமையாததாக இருக்கின்றது.
-Vidivelli

No comments

Powered by Blogger.