Header Ads



பசிலும், கோத்தபாயவும் அமெரிக்கா பறந்தனர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச இன்று அதிகாலை 3.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் மூன்று நான்கு மாதங்களுக்கு திரும்பி வரப்போவதில்லை என கட்சியின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஏற்பட்டுள்ள கடும் பிரச்சினை காரணமாகவே பசில், நீண்டநாட்களுக்கு அமெரிக்காவில் தங்கியிருக்க போவதாக கூறப்படுகிறது.

அதேவேளை வியத்கம அமைப்பில் அங்கம் வகிக்கும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சிலர் வெளியிட்ட கடுமையான விமர்சனங்கள் காரணமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் அமெரிக்கா சென்றுள்ளதாக பேசப்படுகிறது.

அத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பம் கிடைக்காது என்பதை உணர்ந்துள்ளதால், கடும் அதிருப்தியில் இருந்து வரும், கோத்தபாய, அமெரிக்க குடியுரிமையை கைவிடுவது தொடர்பாக இதுவரை தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என கோத்தபாய தரப்பின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.