நாளை நள்ளிரவு முதல், தனியார் பேருந்துகள் பகிஸ்கரிப்பில் குதிக்கிறது
நாளை நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தனியார் பேருந்து சங்கம் அறிவித்துள்ளது.
சாரதிகளுக்காக அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய அபராத கட்டணத்திற்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில், பகிஸ்கரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சங்கத்தின் ஏற்பாட்டாளர் குமார ரத்ன தேனுக தெரிவித்துள்ளார்.
இந்த பணி பகிஸ்கரிப்பிற்காக பவுசர் மற்றும் மேலும் சில வாகனங்களின் சாரதிகள் சங்கங்களும் ஆதரவு வழங்கவுள்ளனர்.
கொழும்பு நகரில் பயணிக்கும் அனைத்து முச்சக்கர வண்டி சாரதிகளின் ஆதரவும் கிடைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய அபராத கட்டணம் காரணமாக சாரதிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதற்கு எதிர்ப்பு வெளியிட்டு பணி பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், சாரதி அனுமதி பத்திரம் உள்ள அனைத்து சாரதிகளும் இதற்கு ஆதரவு வழங்குவார்கள் என அவர் கூறியுள்ளார்.
தற்போது கபொத உயர்தர பரீட்சை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தனியார் பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
எப்படியிருப்பினும் உயர்தர பரீட்சை நடத்தப்படவுள்ள நிலையில் தனியார் பேருந்து பணி பகிஷ்கரிப்பு இடம்பெற்றால் மாணவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகுவார்கள் என குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை கடந்த வாரம் ரயில்வே ஊழியர்கள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பெரும் அசௌகரியங்கள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment