Header Ads



"ஞானசாரருக்கு மன்னிப்பு, ஜனாதிபதி நடவடிக்கை"


பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு மகாநாயக்க தேரர்கள் வேண்டுகோள் விடுத்தால், அது தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என தான் நம்புவதாக மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் தான் கவலையடைவதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர், நாட்டின் சட்டம் பிக்குகளுக்கும் பொருந்தும் எனவும் கூறியுள்ளார்.

ஞானசார தேரருக்கு அந்த தீர்ப்பு சட்டப்படியே வழங்கப்பட்டுள்ளது. தேரருக்கு எதிராக செயற்பட்ட சட்டம் ஏனையவர்களுக்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

3 comments:

  1. ஆம் நீங்கள் சொல்வது நூறு வீதம் உண்மை.குற்றவாளிகளுக்கு ஞானசாரருக்கு போல் தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்.பிறகு ஜனாதிபதியின் பொது மன்னிப்பை பெற்றுக் கொடுத்து வெளியே கொண்டு வர வேண்டும்.கோமாளிகளைப் பார்த்து ஏமாறும் நாம்.

    ReplyDelete
  2. பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் சம்பிக்க

    ReplyDelete
  3. Why the politicians are going behind this Thero? Only the communal minded politicians are going behind this man,not others. Law of this land must be implemented everyone equally.

    ReplyDelete

Powered by Blogger.